உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

நம்முடைய முதல் முத்தம், இப்பிடி அடுத்தவன் முன்னாடி, அவனைப் பழிவாங்கறதுக்காகத்தான் இருக்கனுமா? இது எனக்கு எவ்ளோ ஸ்பெஷல்னு உனக்கு தெரியுமா? ஏன் இப்பிடி பண்ண?

அவள் உணர்வுகள் புரிந்தது அவனுக்கு! சத்தியமா இதை நான் பழி வாங்குறதுக்குன்னு பார்க்கலை மைதிலி! அந்த டைம்ல என்னோட அன்பின் வெளிப்பாடு அவ்ளோதான். நீ நினைப்பது போல், உன் துரோகம் என்னையும், என் மைதிலியையும் சாய்த்து விடப்போவதில்லைன்னு அவனுக்கு காட்ட நினைத்தேன்! அவ்ளோதான். இது, எனக்கு மட்டும் ஸ்பெஷல் இல்லையா என்ன?

அவள் உணர்வுகள் கொஞ்சம் அடங்கியிருந்தது!

அதுக்காக, இப்படியா? அதுவும் அவன் முன்னாடி, நான் சொன்னா கேட்க மாட்டியான்னு கேள்வி வேற! முன்ன ஒரு தடவை, அப்பிடித்தான், என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்ட! இன்னிக்கு இப்பிடி! உன் மேல நம்பிக்கையில்லாமியா, என்னையே உன்கிட்ட கொடுத்துட்டு கம்முனு இருக்கேன்? ஏண்டா என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்குற?

அவளை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது! வாயைத் திறந்து சம்மதம் சொல்லவில்லை! ஆனால், உள்ளுக்குள் குடித்தனமே நடத்துகிறாள். அவளது அந்த அன்பு, மறைமுகமாக அவள் காதலை ஒத்துக் கொண்டது எல்லாம் எனக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது. மெல்ல அவளைச் சீண்டினேன்!

ஹப்பா… நீ எனக்கு கொடுக்கிற மரியாதையை நினைச்சா எனக்கு புல்லரிக்குது மைதிலி.

நீ பண்ணக் காரியத்துக்கு… கோபித்து சிணுங்கியவள் கேட்டாள்! என்கிட்ட ப்ளான் பத்தி சொன்னப்ப, ஏன் இதைப் பத்தி சொல்லவேயில்லை?

எனக்கு சிரிப்புதான் வந்தது. அவளை மெல்ல அணைத்தவன், அவள் காதில் கேட்டேன், இப்ப நான் பண்ணதுக்கு கோபமா? இல்ல, சொல்லாம பண்ணிட்டேன்னு கோபமா?

——

பதில் சொல்லு.

ம்ம்… ரெண்டுக்குந்தான்!

ஓ, அப்ப, உன்கிட்ட சொல்லியிருந்தா, நீ ஓகே சொல்லியிருந்திருப்ப? நாந்தான் அதைப் புரிஞ்சிக்காம இப்பிடி பண்ணிட்டேன்! அப்பிடித்தானே?

இப்பொழுது பதில் சொல்லாமல் அவள் தலையை நிமிர்த்தி அவனை முறைத்தாள்!

சிரித்தவன் சொன்னான். ஆக்சுவலி, இது என் ப்ளான்லியே இல்லை மைதிலி! அவன் பேச ஆரம்பிச்சதும் எனக்கு ரொம்பவே கோவம் வந்துருச்சு! பத்தாதுக்கு நீயும் வேற என்னை அடிக்கடி ப்ளாண் பண்ணியே கவுத்துடுறன்னு ஏற்கனவே திட்டியிருக்கியா, சரி சும்மா ஏன் திட்டு வாங்கனும்னு இப்பிடி பண்ணிட்டேன்!

இப்போது அவனைச் செல்லமாக அடிக்க ஆரம்பித்தாள். அது திட்டுனதா? அதுக்காக இப்பிடித்தான் பண்ணுவியா? ம்ம்?

ஏய், அடிக்காத வலிக்குது!

ம் அதுக்குதானே அடிக்கிறது! நல்லா வலிக்கட்டும்!

ஏன் பேச மாட்டே? எந்த ஹெல்ப்புக்கும் தாங்க்ஸ் சொல்றது கிடையாது. ட்ரீட் கேட்டாலும் கொடுக்குறது கிடையாது! நான் என் மனசுல இருக்குறதைச் சொல்லி மாசக் கணக்குல ஆனாலும், அதுக்கு, பதில் கிடையாது!

ஆனா, கண்ணுலியே தூண்டில் போடுவாளாம், ஆசையாப் பாப்பாளாம், ஏதாவது வேணும்னா, அதைச் செய்னு உத்தரவு மட்டும் போடுவாளாம்! அப்பிடியே தள்ளி நின்னு உசுப்பேத்துவாளாம்! ஆனா மனசுக்குள்ளியே குடித்தனம் நடத்துவாளாம்! நாங்களும் எவ்ளோ நாள்தான் பொறுத்துக்குறது?

அவள் பதில் பேசாமல், அவன் மார்புக்குள் புதைத்துக் கொண்டாள்!

முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையாய் இருந்தவன் கேட்டான், ஏன் மைதிலி, நாந்தான் அறியாப் பையன், தெரியாமப் பண்ணிட்டேன்! நீ என்னைத் திருத்தியிருக்கலாம்ல? பதிலுக்கு நீயும் ஏன் கொடுத்த? நானாச்சும் தெரியாம கொடுத்தேன், நீ தெரிஞ்சே கொடுத்தியே? நீ ஏன் மைதிலி அப்பிடி பண்ண?