உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

அவள் அப்பா, தன் மனைவியை ஓங்கி ஒரு அறை விட்டார். அதன் பின் ப்ரியாவின் அம்மா பேசவேயில்லை. பின் ராஜாவைக் கையெடுத்துக் கும்பிட்டவர், என்னை மன்னிச்சிடுங்க மாப்ளை என்றவர், நீங்க எடுக்கிற எந்த முடிவுக்கும் நாங்க கட்டுப்படுறோம் மாப்ளை என்றார். என்னைப் பொறுத்தவரை, என் பொண்ணு செத்துட்டா, நீங்க அவளை வெட்டிக் கொன்னாலும் ஏன்னு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டார்.

ப்ரியாவுக்கான திட்டம் தயாரானது!

அதன் பின், மைதிலி, ராஜாவிடம், ப்ரியாவிற்க்கு என்ன ப்ளான் என்று கேட்டிருந்தாள்.

ராஜாவோ குழப்பத்தில் இருந்தான். ப்ரேமை என்னச் செய்வது எனச் சட்டென்று யோசித்தவனால், ப்ரியா விஷயத்தில், உடனடியாக முடிவுக்கு வர இயலவில்லை. வரும் சின்னச் சின்ன யோசனைகளும், ப்ரியாவிற்கு இது பத்தாது என்றே தோன்றியது.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி, கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னாள்.

ப்ரியாவுக்கு, நான் ப்ளான் சொல்றேன், கேட்கறீங்களா?

நீயா, சொல்லு, சொல்லு!

சொல்றேன், ஆனா…

ஆனா?

ஆனா, என்னை நீங்க தப்பா நினைக்கக் கூடாது! சரியா?

நீ சொல்றதுல உன்னை தப்ப நினைக்க என்ன இருக்கு?

ப்ளானைச் சொன்னாள் மைதிலி. ராஜாவிற்கு கோபம் வந்திருந்தது.

ஏன் மைதிலி இப்படி?

நீங்க தப்பா நினைக்க மாட்டேன்னு சொன்னீங்க.

இப்பியும் தப்பால்லாம் நினைக்கலை மைதிலி. ஆனா, இப்பிடித்தான் பழிவாங்கனுமா?

அவனையே பார்த்தவள் சொன்னாள். நீங்கதானே, சொன்னீங்க, ஒரு ஆணை எங்க அடிச்சா, வலிக்கும்னு உங்களுக்குத் தெரியும்னு. அதேதான். ஒரு பொண்ணை எங்க அடிச்சா வலிக்கும்னு, எனக்குத் தெரியும். உங்களால இப்பிடி யோசிக்க கூட முடியாது!

எல்லாம் சரிதான் மைதிலி! ஆனா, இப்பிடித்தான் செய்யனுமா என்று தயங்கினான்.

இது என் விருப்பங்க. இதை ஒத்துக்குறதும், ஒத்துக்காததும் உங்க முடிவு. என்னைப் பொறுத்தவரை, ப்ரியா தான் மிஸ் பண்ணது என்னான்னு அவளுக்குத் தெரியனும்!

கடைசியில், மைதிலியின் யோசனையுடன், ராஜாவின் சிறிய யோசனையும் சேர்த்து திட்டம் முடிவானது!
அந்தத் திட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று மைதிலி வந்திருக்கிறாள். அதில் முதற்கட்டம் முடிவடைந்தது. அடுத்த கட்டம் இப்போது…

அந்தத் திட்டத்தின் படிதான், அவளின் முன்பு வேண்டுமென்றே அண்ணா என்று கூப்பிட்டாள் மைதிலி.

ப்ரியா அவள் ரூமிற்குச் சென்று கால் மணி நேரம் ஆகியிருந்தது. மைதிலி சைகை செய்தாள்.

ராஜா கொஞ்சம் கடுப்பாக, பெருமூச்சு விட்டு எழுந்தான். அவன் ஆதங்கத்தைப் புரிந்திருந்த மைதிலி, அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள்.