உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

யாரோ காலிங்பெல் அடித்தார்கள்! கதவைத் திறந்தவளுக்கு மிகுந்த ஆச்சரியம். அங்கே நின்று கொண்டிருந்தது மைதிலி! ஏனோ, அவள் மிக அழகாய் இருந்தாற் போன்று தோன்றியது. இவள் மேக் அப்பே பண்ணிக்க மாட்டாளே? இன்னிக்கு, எப்பிடி இவ்ளோ அழகா இருக்கா?

மைதிலி உள்ளே நுழைந்தாள். உள்ளிருந்து ராஜா வெளியே வந்தான்.

வாவ், மைதிலி, வெல்கம்! என்ன சர்ப்ரைஸ் விசிட்?

சும்மாதான், உங்களையெல்லாம் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.

ஓ, வெல்கம். உட்காரு! என்ன சாப்பிடுற?

ப்ரியா இருப்பதையே கண்டு கொள்ளாமல், அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ப்ரியா குழப்பத்திலேயே இருந்தாள்!

என்ன ப்ரியா, வந்தவங்களுக்கு காஃபி வேணுமான்னு கேட்டு எடுத்துட்டு வரத் தெரியாதா? என்று அதிகாரமாய் ராஜா கேட்டான்.
ப்ரியா இன்னும் முழித்தாள். இது அன்று, ப்ரேம் பேசின மாதிரியே இருக்கே என யோசித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள்! வெளியே, மைதிலியும், ராஜாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இவங்க, இவ்ளோ க்ளோஸா பழகுற அளவுக்கு பழக்கமா என்ன? ஒண்ணும் புரியலியே! வந்து காஃபி கொடுத்தவளின் முகத்தில் இன்னமும் குழப்பத்திலேயே இருந்தது.

என்னண்ணா, நான் வந்தது உங்க வைஃப்க்கு புடிக்கலை போல, நான் வந்தப்பியும் வாங்கன்னு சொல்லலை. இப்பியும் இவ்ளோ நேரமா ஃபேஸ்ல ஸ்மைலே இல்லை, ஒரு வேளை, நான் வந்தது உங்க வைஃபுக்கு புடிக்கலியோ?

என்ன ப்ரியா, என்னாதான் மேனர்ஸ் பழகியிருக்கியோ! உனக்கு அம்மா இருந்தும், பழக்க வழக்கத்தை, அவிங்க சரியா சொல்லி கொடுக்கல போல. என்ன அம்மா, என்ன பொண்ணோ, ச்சே, என்றான்.

சத்தியமாக இது அதே வார்த்தைகள்தான்… ஏதோ நடக்குது! என்னான்னு புரியலியே!

எப்பிடிண்ணா, நீங்க இவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தாலும், மேனர்ஸ் தெரியாத, ப்ரியா மாதிரி பொண்ணை கட்டிகிட்டீங்க?

என்ன பண்றது மைதிலி, இவளுக்கு வேலையே நாந்தான் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் எனக்கு ஈக்வல் இல்லைன்னாலும், கல்யாணம் ஆகிடுச்சே! கடமை இருக்கில்ல.

நீங்க எப்டி ப்ரியா, எங்க அண்ணாவை வளைச்சுப் புடிச்சீங்க? கல்யாணத்துல யாரும் உங்களை இதைக் கேக்கலியா? ஏனோ, அவள் அண்ணா எனும்போது அழுத்திச் சொன்னது போல் இருந்தது!

சரி விடு மைதிலி, இவளைப் பத்தி ஏன் பேசிகிட்டு? இன்னிக்கு என்ன, இந்த சாரில இவ்ளோ அழகா இருக்க?

இப்பொழுது மைதிலி வெட்கப்பட்டாள். நீங்க வாங்கிக் கொடுத்ததுதானேண்ணா!

இப்பொழுது ப்ரியாவின் கண்கள் விரிந்தது. இந்தப் புடவை, தங்களுடைய வெட்டிங் டேவிற்கு ராஜா வாங்கி வந்த புடவையாயிற்றே? அது எப்படி இவள் கையில்? தலையே சுற்றியது. அதற்க்கு மெலும், தாங்க முடியாமல், அவர்களது அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் சென்ற பின், மைதிலி சொன்னாள். டைம் ஃபார் நெக்ஸ்ட் ஸ்டெப்!

இடைப்பட்டக் காலத்தில், பல விஷயங்கள் நடந்திருந்தது. எப்பொழுதும் போல் அவர்கள் அன்பு கூடியிருந்தது. அதே சமயம், அதற்கு மேல், அவர்கள் தள்ளி நின்றே காதலைப் பரிமாறிக் கொண்டார்கள்.

இடையே, ராஜா, ப்ரியாவின் பெற்றோரை அழைத்தான். அவள் அப்பாவிடம், ஓரளவு டீசண்ட்டான புகைப்படங்களைக் காட்டினான்.

அவர் அதிர்ந்தார். இவனா?

அவர்களது துரோகத்தின் அளவை, வாய் மொழியிலேயே சொன்னவன், நான் உங்ககிட்ட காமிக்கிறது, சொல்லுறது எல்லாமே, அவ செஞ்சதுல கால்வாசி கூட இல்லை மாமா என்றான்.

அவருக்கு அவர் பெண்ணைப் பற்றியும் தெரியும், மாப்ளையைப் பற்றியும் தெரியும். அவர் தலை குனிந்தார். மன்னிச்சிடுங்க மாப்ளை!

அப்போதும், அவள் அம்மா, கொஞ்சம் ஆடத்தான் செய்தார்கள். நீங்க என்னங்க, யாரோ சொல்றாங்கன்னு நம்ம பொண்ணை சந்தேகப்படுறீங்க? என்ன மாப்ளை ஓவரா பேசுறீங்க? போலீஸ்ல வரதட்சணைக் கேட்டு, பொய் கம்ப்ளெயிண்ட் பண்ணா என்ன ஆகும் தெரியுமா? என்று திமிராகப் பேசினாள்.

ராஜாவிற்க்கே கோபம் வந்திருந்தது. கோபத்துடன், ப்ரேமும், ப்ரியாவும் பேசியதில், டீசண்ட்டாக இருந்த ஆடியோவை மட்டும் ஒலிக்க விட்டான். பின் சொன்னான்.

வயசுல பெரியவிங்கன்னுதான், உங்களைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன். உங்க பொண்ணு பண்ண எல்லா லீலையும், என்கிட்ட வீடியோவாவே இருக்கு? அதெல்லாம் வெளில யாராவது பாத்தா, நாறிடும். நீங்கல்லாம் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்க வேண்டியதுதான். பாக்குறீங்களா?

இந்த நிமிஷம், நீங்க என்னை பொய் கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன்னு மிரட்டுனது கூட வீடியோல பதிவாயிட்டு இருக்கு. அதுனால, இந்த மிரட்டுற வேலைல்லாம் என்கிட்ட வேணாம்! நீங்க ஒழுங்கா இருந்து, ஒழுங்கா வளத்திருந்தா, உங்க புள்ளை ஒழுங்கா இருந்திருக்கும்.

உங்கத் திமிரு, அகங்காரம்தான் உங்க புள்ளை வாழ்க்கையைக் கெடுத்திருக்கு! நீங்க பெத்ததுக்காக, எக்கேடோ கெட்டுப் போங்க. என் வாழ்க்கை என்னாத்துக்கு வீணாகனும்? அவர் முகத்திலேயே டிடக்டிவ் ஏஜன்சியின் ரிப்போர்ட்டை எறிந்தான். பாரு, உன் வளர்ப்போட லட்சணத்தை! எனக்கு ப்ரியா மேல இருக்கிற கோபத்தை விட, உன் மேல இருக்கிற கோவந்தான் ஜாஸ்தியா இருக்கு!

என்ன ஆட்டம் ஆடுன? பொம்பளையா நீயெல்லாம்? இப்ப நான் பழி தீக்கனும்னு நினைச்சேன்னா, நீ அசிங்கப்பட்டு போயிடுவ, பாக்குறியா? பாதிக்கப்பட்ட நானே, மாமா முகத்துக்காக அமைதியா பேசிட்டிருந்தா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னும் ஆடுற? ராஜாவின் ஆவேசத்தில், ப்ரியா அம்மாவிற்கே சற்று பயம் வந்திருந்தது.