உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

அடுத்த வாரம், ப்ரியா ஆன்சைட்டிலிருந்து வந்து விடுவாள். நாளை கோர்ட் ஆர்டர் கைக்கு வந்து விடும்! இடைபட்டக் காலங்களில் ப்ரேம் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அதே சமயம் சும்மாவும் இருக்கவில்லை.

அவனும் ஒரு லாயரை கன்சல்ட் செய்திருந்தான். அவன் கேசைக் கேட்டவர், உடனே சொல்லிவிட்டார். கம்முனு காம்ப்ரமைசுக்கு போங்க சார். வக்கீலுங்க வர்றதே, எங்க மூலமா காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்னுதான். அவிங்கதான் ஆல்ரெடி காம்ப்ரமைஸ்க்கு ஓகே சொல்லிட்டாங்களே! என்ன பிரச்சினை உங்களுக்கு?

இல்லை சார், அந்த ரீசன் மட்டும் மாத்த முடியுமான்னு…

சார், அவிங்க சொன்னது சரிதான். உங்க தப்புக்கு, அந்த ரீசன்தான் அந்தப் பொண்ணுக்கு சரியான வாழ்க்கையைக் கொடுக்கும். நான் பேசுறதைப் பத்தி எனக்கு ஒண்ணுமில்லை, ஆனா, அதுல அவிங்க கடுப்பாயி, கண்டிஷன்ஸ் அதிகம் பண்ணிட்டாங்கன்னா என்னைக் கேக்கக் கூடாது…

அவன், லாயரிடம் பேசி விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில், மைதிலியிடமிருந்து கால் வந்தது!

என்ன சொல்றாரு, உன் லாயர்?

மைதிலி!

என்ன காம்ப்ரமைசுக்கு போகச் சொன்னாரா? உன் தகுதிக்கு நாங்க இப்ப கொடுக்குறதே அதிகம்னு சொன்னாரா? என்கிட்ட வேணா, இன்னும் ரெண்டு மூணு லாயர் நம்பர்ஸ் இருக்கு. பேசிப் பாக்குறியா?

அடிபட்டிருந்த அவன் மனது, எப்படி அவளுக்கு உடனுக்குடன் எல்லாம் தெரிகிறது என்று புரியாமல், இன்னும் நொந்து போனான். இனி, அவர்கள் சொல் படி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

இடையில், அவன் பெற்றோர் மூலமும் தூது விட்டுப் பார்த்தான். மைதிலிக்கு கோபமாய் வந்தாலும், கொஞ்சம் அமைதியாகவே கேட்டாள்!

என்னை, எத்தனை தடவை மலடின்னு சொல்லியிருக்கீங்க? ஏமாத்தி கட்டி வெச்சிட்டாங்கன்னு சொன்னீங்களே? இப்பச் சொல்லுங்க, யாரு ஏமாத்திக் கட்டி வெச்சது?

அவர்கள் தலையைக் குனிந்து இருந்தனர். எங்களுக்கு தெரியாதும்மா!

நான் மலடிதான்கிறது மட்டும் உங்களுக்குத் தெரியுமா? நீங்க டாக்டரா? இல்லை டாக்டரை வெச்சு டெஸ்ட் பண்ணியிருந்தீங்களா?

அவர்களால் பேச முடியவில்லை…

இன்னொரு வீட்டுப் பொண்ணுன்னா, உங்களுக்கும், உங்க புள்ளைக்கும் எளக்காரமில்ல? இப்ப எதுக்கு வந்தீங்க?

இல்லைம்மா… நீ சொல்றதெல்லாம் நியாயந்தான். ப்ரேம் மேலத்தான் தப்பு. இருந்தாலும், அந்தக் காரணத்தை வெச்சுக் கேக்காம, பொதுவா பிரிஞ்சிடலாமே?

ஏன் அந்தக் காரணத்தைச் சொன்னா என்னா?

அது… அந்தக் காரணம் சொன்னா வெளிய தலை காட்ட முடியாதும்மா?

அப்ப என் வாழ்க்கை வீணாப் போனா பரவாயில்லையா?

சரி வேணாம், உங்க வழிக்கே வர்றேன்! நான் வேற காரணம் சொல்லிக்கிறேன். என் வாழ்க்கையை வீண் பண்ணதுக்கு, ஒரு 5 கோடி கொடுத்துடுறீங்களா? …. 2 கோடி? …. அட்லீஸ்ட் 1கோடி?

அவ்ளோ காசுக்கு நாங்க எங்க போவோம்?

சரி எதுவும் வேணாம்! எனக்கு, நல்லதா ஒரு மாப்பிளையைப் பாத்து கல்யாணம் பண்ணி வைங்க, போதும்!

என்னம்மா இப்பிடி பேசுற?