உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

இவ்வளவு நாட்கள் ப்ரேம் செய்த துரோகத்தின் வலி, ராஜாவின் அன்பு கொடுத்த தெம்பு, இபொழுது அவன் முத்தமிடச் செயததால் வந்த குழப்பம் எல்லாம் சேர்ந்து அவளை ஆவேசம் கொள்ளச் செய்திருந்தது.

என் மாமா முன்னாடியே, என் கையைப் புடிக்கிறியா என்று பளாரென்று ப்ரேமை அறைந்தாள்! அறைந்தவள், திரும்பி ராஜாவின் கண்களைப் பார்த்து, அவன் முகத்துல நான் முழிக்க விரும்பல. சீக்கிரம் அவனை இங்கிருந்து அனுப்புங்க, என்றுச் சொல்லிவிட்டு, அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்! செல்லும் போதும், அவனையே பார்த்துக் கொண்டுச் சென்றாள். அது பல உணர்சிகளைக் கொட்டிச் சென்றது!

உன் திங்க்ஸ் எல்லாம் இந்த பேக்ல ரெடியா இருக்கு. வேற ஏதாவது தேவைப்பட்டுச்சுன்னா எங்க லாயரைக் காண்டாக்ட் பண்ணு.

அப்புறம் இன்னொன்னு, புதுசா வேலைக்கு போற கனவுல இருந்தீல்ல, அதுவும் எங்க செட் அப்புதான். நாளைக்கு அந்த கம்பெனி பக்கம் கீது போயிடாத. அடிச்சுத் துரத்திடுவான்! நவ், கெட் அவுட்!

கீழே இருந்த டிடெக்டிவ் ஆட்களை அழைத்தவன், அவர்களிடம் ப்ரேமை, அவனது ஊரில் கொண்டு போய் விடச் சொன்னான்.

அவமானத்தின் உச்சியில், கண்கள் கலங்க நின்றிருந்தான் ப்ரேம். பைத்தியம் பிடிக்காத குறைதான்! அவனது தன்னம்பிக்கை சுத்தமாகப் போயிருந்தது.

எந்தப் பணத்திற்க்காக அவன் நாடகமாடினானோ, அந்தப் பணம் அவனிடமிருந்து சுத்தமாக பிடுங்கப்படிருந்தது. எந்த ஆண்மைத் திமிரில் அவன் ப்ரியாவை நெருங்கினானோ, அந்த, ஆண்மையே இல்லாதவன் என்று உலகத்தின் முன் ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டான். எந்தத் தன்னம்பிக்கையை மைதிலியிடம் குறைத்தானோ, அதுவும் சுத்தமாக அவனிடமிருந்து பிடுங்கப்பட்டிருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ப்ரியாவிடம், உன் புருஷன் முன்னாடி தொடுவேன் என்று பேசியவன் முன்பே, மைதிலி, ராஜாவை முத்தமிட்டாள். அவன் செய்த தவறுகளுக்கு, அவர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஆனால், அவர்கள் திருப்பி அடித்ததை அவனால், நிரூபிக்க முடியாத கையாலாகாத்தனம் அவனை உலுக்கியது. அவனது துரோகங்களுக்கு, பொய்களின் மூலம் பழி தீர்க்கப்பட்டது.

பைத்தியம் பிடித்தாற் போன்று, அமைதியாக அவர்களுடன் சென்றான்.

அவர்கள் சென்றவுடன் பெரு மூச்சு விட்ட ராஜா, இனி மைதிலியைச் சமாளிக்க வேண்டுமா என்று அவளது அறைக்குள் சென்றான்!

அறையில், ஜன்னலோரத்தில் நின்று அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மைதிலி! மெல்ல அவள் பின் சென்று நின்றேன்.

மைதிலி என்று அழைத்தவனை அவள் திரும்பி பார்த்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவன் போயிட்டானா?

ம் என்று சொன்னவுடன், திரும்ப ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோபமா மைதிலி! அவள் அமைதியாகவே இருந்தாள். உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி மைதிலி!

நான் சாரி சொல்வதற்குள் அவளது கைகள் என் வாயை மூடியிருந்தது! அவள் என் மார்பினில் சாய்ந்திருந்தாள். மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள்!

ஏண்டா இப்பிடி பண்ண?

[b]எனக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் கோபத்தில் பேசுவாள் என்று நினைத்தால், அவள் என்னிடமே என்னைப் பற்றி முறையிடுகிறாள்![/b]

மைதிலி!

அன்னிக்கு நீ கேட்டத்துக்கு, நான் இன்னும் ஓகே சொல்லலீல்ல? அதுக்குள்ள நீ ஏன் இப்பிடி பண்ண?

———