உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

திருடன், இதே வேலையாப் போச்சு அவனுக்கு! இப்படியே போகிற போக்கில் ஏதாவது செய்து, என்னைத் தடுமாற வைப்பது! அள்ளி அள்ளி, அன்பால் நனைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தள்ளி நிற்பது. என்னுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி விட்டு, இப்போது அவன் மேலேயே ஆசைப்படு, இல்லையில்லை பேராசைப் படு என்கிறான்.

அவள் மனது மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது! அதே சமயம் மிகுந்த குழப்பத்திலும் இருந்தது!

வெளியே சென்றவன் மதியத்திற்கு மேல்தான் வந்தான். அவளுக்கு கோபமே வந்திருந்தது!

கதவைத் திறக்கும் போதே, எங்க போனீங்க? மதியானம் சாப்ட்டீங்களா இல்… பேசியவள் அப்படியே உதட்டினைக் கடித்துக் கொண்டாள்!

அவள் திட்டிக் கொண்டிருக்கும் போதே, அவன் பின்னாலிருந்து ஒரு வயதானவர் தென்பட்டார். பார்த்தவுடன் தெரிந்தது, அது ராஜாவின் அப்பா என்று!

அப்புறமா என்னைக் கொஞ்சிக்கலாம் என்று கண்ணடித்தவன், இதான் எங்க அப்பா என்று அறிமுகம் செய்தான்.

வாங்க! நீங்க வரீங்கன்னு இவர் சொல்லவேயில்லை!

உள்ளே வந்தவர், அவளையே பார்த்தவர். அவள் தலையை வருடி, நீ நல்லா இருக்கனும்மா! நல்லா இருப்ப என்று ஆசிர்வாதம் செய்தார். அதுவே சொல்லியது, அவருக்கு நடந்த எல்லா விஷயங்களும் தெரியும் என்பது!

மைதிலிக்கு கண்கள் கலங்கியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலியின் அப்பாவிற்க்கும் மனம் நிறைந்தது!

உள்ளே வந்தவர்கள், உங்க அப்பா தனியா இருப்பாரு, ஃபீல் பண்ணுவாருன்னு சொன்னீல்ல. அதான், அவர் ஏஜ் க்ரூப்லியே அவருக்கு கம்பெனி கூட்டிந்திருக்கேன்.

அவள் செல்லமாய், வெவ்வவ்வே என்று பழிப்புக் காட்டியவள். உட்காருங்க. நான் காஃபி எடுத்துட்டு வரேன் என்று சென்றாள்.

ராஜாவின் அப்பா வந்தது, மைதிலியின் அப்பாவிற்கும் பெரிய ரிலீஃபாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் நிறையப் பேசிக் கொண்டார்கள்.

அதன் பின் நாட்கள் வேகமாய் நகர ஆரம்பித்தது. ராஜா அப்பா கூட நடுவில் இன்னும் இரு முறை வந்து, மைதிலியைப் பார்த்துவிட்டு போயிருந்தார்.

எதுவும் வெளிப்படையாய் பேசிக் கொள்ளாவிட்டாலும், மைதிலியும், ராஜாவும், இருவரும் சேர்ந்து இருக்கும் தருணங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர். இன்னொருவருடைய விறுப்பு வெறுப்புகளைச் சொல்லாமலேயே புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது அன்பு, இருவருடைய அப்பாவிற்கும் கூட புரிந்திருந்தது. அதில் அவர்களுக்கும் பெரிய சந்தோஷமே! ஆனாலும் மைதிலியின் மனம் ஒரு மாதிரி குழப்பத்திலேயே இருந்தது!

சமயங்களில் அவளை விழுங்கி விடுவது போல பார்ப்பான். அதை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் மைதிலியும் தவிப்பாள். ஆனாலும், அவளை நெருங்கியதில்லை, தீண்டியதில்லை! இப்படியே, மைதிலியும், ராஜாவும், தங்களுக்குள் கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்திருந்தனர்.

இன்று!