உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

நீங்க பேச வைக்கிறீங்க! உங்க புள்ளை தப்பு பண்ணப்பல்லாம் வேடிக்கை பாத்தீங்களே? அன்னிக்கே கேட்டிருந்தீங்கன்னா, இன்னிக்கு நான் இப்படி பேச மாட்டேன்ல? என்னை மலடின்னு சொன்னதில்லாம, அவன் என்னா உன்னை அடிக்கிறானா, கொடுமைப்படுதுறானான்னு வாய் கூசாம கேட்டீங்கள்ல, அதான் என்னைப் பேச வைக்குது!

அவர்கள் அமைதியாய் திரும்பிச் சென்று விட்டனர்!

எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த ப்ரேம், அமைதியாக சொல்வதற்கு ஒத்துகொண்டான்.

தீர்ப்பும் வந்தது. கோர்ட் ஆர்டருடன், ப்ரேம், வீட்டினுள் நுழையும் போது, மைதிலி அங்கு இருந்தாள்.

என்ன விஷயம்?

நீ எங்க மைதிலி இங்க?

நான் இங்க இல்லாம, வேற எங்க இருக்கிறது?

இது நான் வாங்குன வீடு மைதிலி!

ஒரு பத்திரத்தை அவனிடம் நீட்டினாள். நல்லாப் பாருங்க, வீடு யார் பேரில் இருக்குன்னு!

ஆனா, வாங்குனது நான் மைதிலி! அவன், பாவமாய் சொன்னான்.

அது கோர்ட்டுக்கு தெரியாதே? நீங்க வேணா கோர்ட்ல ப்ரூவ் பண்ணிட்டு, இந்த வீட்டுக்கு வந்துக்கோங்க! இப்ப கிளம்புறீங்களா?

இவ்வளவு நாள் பொறுமையாய் இருந்தவன், இன்று தோற்ற கோபத்தில் இருந்தவன், மைதிலி தணியாக இருப்பதைப் பார்த்தவுடன் திமிர் வந்தது!

என்ன, ஓரேடியா போயிட்டிருக்க? போனாப் போவுதுன்னு பொறுத்துப் பாத்தா ரொம்பதான் துள்ளுற… ஒழுங்கு மரியாதையா இந்த வீட்டை விட்டுப் போயிடு!

நினைச்சேண்டா, எங்க அவ்ளோ சீக்கிரத்துல திருந்திட்டியோன்னு? உன் புத்தியைக் காட்டிடீல்ல?

புதிதாய் ஒரு குரல் கேட்கவும், திகைத்து திரும்பியவன், உள்ளிருந்து வந்த ராஜாவைப் பார்த்ததும், மலங்க மலங்க விழித்தான்!

என்னை எதிர்பார்க்கலீல்ல நீ?

நீ, எங்க இப்பிடி?

ப்ளான் பண்ணவனுக்குத் தெரியாதா? எங்க, எப்ப இருக்கணும்னு? என்று சொல்லிய படியே வந்தவன், மைதிலியின் அருகில் வந்ததும், அவள் தோளில் கை போட்டு அவளை அணைத்தவாறு நின்றான்.

ப்ரேமுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது! தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டது அவனுக்குப் புரிந்தது.

மைதிலிக்கோ சங்கடமாக இருந்தது. ஒரே வீட்டில், ஒரே அறையில் இருந்த போது கூடத் தேவையின்றி தொடாதவன், இன்று தோளிலேயே கை போடவும், சங்கடமாக இருந்தாலும், அமைதியாக நின்றாள்.

என்ன மைதிலி, இவன் இப்பிடி முழிக்கிறதைத்தான் நீங்க பாக்காம மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னியா? என்றுச் சொன்ன ராஜாவைப் பார்த்து புன்னகையுடன் சொன்னாள்.