பழிக்குப்பழி 1 326

அவளை பார்க்கும்போது, ஆக்சிடன்ட்டில் அடிபட்டதுபோல தெரியவில்லை. எனக்கு சந்தேகம் வந்தது, என் மகள்கூட இருந்த பெண் எங்கே என்று கேட்டேன், அவளுக்கு சாதாரண அடிதான், கீழே ஜெனரல் வார்டில் இருப்பதாக நர்ஸ் சொன்னார்.

என் மகளின் ரிப்போர்ட்ஸை கேட்டேன், டாக்டர் வருவாரு அவர்கிட்டயே கேட்டுகங்கோ, கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ என்று, கன்னடம் கலந்த தமிழில் சொன்னார்.

கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் டாக்டர் வந்தார், அவர் ஓரளவு நல்ல தமிழ் பேசினார், நானும் என்னை டாக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ உங்ககிட்ட சொல்ல பிரச்னை இருக்காது என்றார். என்ன மேம் என்றேன், நர்ஸ் என்னனு சொன்னாங்க என்றார், ஆக்சிடன்ட் என்று சொன்னார்கள் என்றேன்.

பொம்பளபுள்ள பாருங்க அதான் நாங்க அப்படி சொல்ல சொன்னோம், என்றார், எனக்கு புரியவில்லை மேம் என்றேன். ஏக்ச்சுவளி உங்க பொண்ண கேங் ரேப் பண்ணிருக்காங்க என்றார். எனக்கு தலையில் இடி இறங்கியது, நான் அமைதியாக காட்டிகொண்டேன்.

அவர் எக்ஸ்பிளைன் பண்ண வந்தார், வேணாம் மேம், ரிப்போர்ட்ஸ் குடுங்க நானே படுச்சு பாத்துக்கிறேன் என்றேன். படிக்க படிக்க எனக்கு கண்ணீர் ஊத்தியது, நான்கு பேர் என் பெண்ணை சீரழித்திருக்கிறார்கள்,

கொலை செய்வது நோக்கம் இல்லை என்று எழுதி இருந்தது, அவர்களிடம் சண்டை போட்டிருக்கிறாள், அதில் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள், இன்னும் பலது இருந்தது, இன்னும் தாங்கவன்னா கொடுமையை என் குழந்தைக்கு செய்திருக்கிறார்கள், எனக்கு அதற்க்கு மேல் படிக்க முடியவில்லை.