அவர் வீட்டின் குடும்ப டாக்டர் நான் தான். நேராக அவரை பார்க்க வீட்டுக்கே போனேன், என்ன டாக்டர் இந்த நேரத்தில என்றார். உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகனும் என்றேன், சொல்லுங்க பண்ணிடுவோம் என்றார். ஒரு 4பேரை கடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றேன்.
கொஞ்சம் அதிர்ச்சியானார், என்ன டாக்டர் என்ன விஷயம் என்று ஆரம்பித்தார், ப்லீஸ் காரணம்லாம் கேட்காதீங்க உங்களால முடியும்னா பண்ணி குடுங்க என்றேன், அவர் ஆச்சரியமாக, கேக்காதவரு உதவின்னு கேற்றுகீங்க செய்யாம எப்படி என்றார். அட்ரஸ் குடுங்க என்றார், நான் அந்த நாலு பேர் இப்போ தங்கி இருக்கும் அட்ரெஸ்ஸை கொடுத்தேன், சிரித்தார்,
ஏன் ராஜா என்றேன், ரொம்ப நல்லதா போச்சி, எங்க பசங்க ஒரு பார்ட்டிகிட்ட பணம் வாங்க பெங்களூரு தான் போயிருக்கானுக இதோ தூக்கிருவோம் என்றார். எப்போ என்றேன், நாளைக்கு காலைல 5 மணிக்கி நீங்க தூக்க சொன்ன ஆளுக இங்க இருப்பாங்க என்றார். பணம் என்றேன், நீங்க அந்த பசங்ககிட்ட பேசிக்கங்க என்றார். என் நம்பரை கொடுத்து அவர்கள் வந்ததும் என்னை அழையுங்கள் என்றேன், அவர் கண்டிப்பாக அழைப்பதாக கூறினார், செரி என்று நான் கிளம்பினேன்,
ஒரு 5 வருடம் முன்பு எனக்கு கொஞ்சம் காட்டை ஒட்டி ஒரு கிளினிக் இருந்தது, அதிக மாசுபடும் ஏரியா என்பதால் அதை கவர்மண்ட் அதிகாரிகள் மூடிவிட்டார்கள். அந்த இடத்தை மேடான பகுதியாக ஆக்கிவிட்டதால், என் இடம் கீழே பாதாளத்தில் இருப்பது போலவே இருக்கும். யார் பார்வைக்கும் இப்படி ஒரு இடம் இருப்பது கூட தெரியாது. நான் முதன் முதலில் பார்த்து பார்த்து கட்டிய இடம், 20க்கு 20 என்ற சதுரமான இடத்தில், எல்லா வசதிகளும் செய்து வைத்திருந்தேன், குழாயுடம் தண்ணீர் வசதி, எலக்ட்ரிக் அடுப்பு, பிரிட்ஜ், ஹீட்டர், கழிவறை, டிவி, கம்ப்யூட்டர், சில சமயம் அங்கேயே உறங்கி கொள்வதற்காக அங்கேயே பெட் கூட இருந்தது, எனக்கு மிகவும் பிடித்தமான இடம், இப்பொழுதும் நான் relax செய்ய அங்கே தான் போவேன், என்ன ஒரே குறை, அந்த இடத்தை தடை செய்து விட்டதால் மின்சாரம் கிடையாது, ஆனால் generator வசதியும் செய்து வெய்துள்ளேன், நான் இப்போ இருக்கும் ஏரியாவிக்கு ஒரு 4கி.மீ தள்ளி இருக்கும், மனித நடமாட்டம் இல்லாத ரெஸ்ட்ரிக்டெட் ஏரியா. ஆனால் வாகனங்கள் செல்ல முடியும், என்ன செய்ய போகிறேன் என்பதை திட்டம் போட்டேன்,