நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 6 35

தாமு திகைக்க… சரண்யா சிரிக்க.. அவளது அம்மா சாதாரணமாகக் கேட்டாள்.
”உங்கக்கா என்னடா பண்றா..?”

”வேலைக்கு போறாக்கா..” என்றான் தாமு.

”அவ புருஷன் இருக்கானா..?”

”இல்லக்கா.. வண்டிக்கு போய்ட்டாரு…”

” ஊம்..!! எப்படியோ அவளுக்கும் ஒரு வாழ்க்கை அமஞ்சிருச்சு..! எங்கியோ நல்லாருக்கட்டும்..! ஆமா நீ எப்படா பண்ணிக்கப்போறே..?”என்று கேட்ட போது சரவணன் உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு
”நம்மளுக்கு என்னக்கா இப்ப அவசரம் .?” என்றான்.

சரவணன் சேரில் உட்கார்ந்து அவர்கள் கேரம்போர்டு ஆடுவதைப் பார்த்தான்.
அவன் அம்மா.
” என்ற மகள கட்டிக்கறியாடா..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

தாமு திகைத்தான்.
சரவணன் தன் அம்மாவை முறைத்தான்.

சரண்யா ”அய்ய… இவனா..? இவன் எனக்கு வேண்டாம்ப்பா..” என்றாள்.

அவள் அம்மா ”அவ கெடக்கா.. நீ என்கிட்ட சொல்லுடா..! இவள கட்டிக்கறியா..? ஆனா ஒத்த பைசா தரமாட்டேன்..! நகை.. நட்டுனு.. எதும் கேக்கக்கூடாது.! சும்மா கட்டிக்கறதுனா… இப்பவே வேனா.. இவள கூட்டிட்டு போ..” என்றாள்.

அம்மாவை முறைத்த சரவணன்.. தாமுவைப் பார்த்துச் சொன்னான்.
”வேனான்டா..! இவங்க பேச்சக்கேட்டு… அப்படி ஒரு காரியத்தமட்டும் பண்ணிராத..!
இந்த குடும்பமே.. ஒரு பாவப்பட்ட குடும்பம்..! இதுல நான் வந்து பொறந்ததே.. போன ஜென்மத்துல நான் பண்ண பாவத்தோட சம்பளம்..! இந்த சேத்துல நீயும் வந்து மாட்டிக்காத..! நீயாச்சும் நல்லாரு..! நானே சொல்றேன்.. நீ வேற எவள வேனா கல்யாணம் பண்ணிக்க..! ஆனா இவள மட்டும் பண்ணிராத..!!”

” ஏ.. அதுக்கு.. மொதல்ல நா ஒத்துக்கனுமே.. ”என்றாள் சரண்யா ”நான் ஒரு பிச்சைக்காரனக்கூட கட்டிக்குவேன்.. ஆனா இவன மட்டும் பண்ணிக்கவே மாட்டேன்..”

சரவணன் ”நீ சொன்னாலும்.. சொல்லலேன்னாலும் உனக்கெல்லாம் பிச்சைக்காரன்தான்டீ கரெக்ட்டு..” என்றான்.

அம்மா ”அப்ப ஒன்னும்.. உருப்படறதா.. இல்ல..?” என்றாள்.

” அப்றம்.. நீ பெத்தது எல்லாம் உன்னமாதிரிதான இருக்கும்..” என்று தன் தாயைப் பார்த்துச் சொன்னான் சரவணன்.

தாமு அவர்கள் மூவரையும் மாறி.. மாறிப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான்.

உடனே சரண்யா.. தாமுவின் மேல் ஒரு காயினை எடுத்து வீசியவாறு சொன்னாள்.
”ஏ.. லூசு பக்கி..! நீ இங்க பாத்து வெளையாடு மச்சான்.. அவங்க.. அப்படித்தான்..!”

சரவணன் எழுந்து அவள் பின் மண்டையில் ஒன்று போட்டான்.
” மண்டை..! மூடிட்டு எந்திர்ரீ..!” என்றவன் தாமுவைப் பார்த்து.. ”வாடா..வெளில போலாம்..” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து வெளியே கூட்டிப் போனான்.

வெளியே போனதும் சொன்னான் சரவணன்.
”எங்காத்தாக்காரியெல்லாம் இந்த ஜென்மத்துல நல்லா சாகமாட்டாடா…”

”விட்டா..” என அவனை சமாதானப் படுத்தினான் தாமு ”பழகிருச்சு..!”

” ஊசி மட்டும் இல்லடா.. அப்பப்போ மாத்திரை.. போட்டுக்கறா.! அதும் பத்தலேன்னா.. தண்ணியடிச்சிட்டு.. செரியான அட்டகாசம் பண்றாடா.. வீட்டுக்குள்ள..! என் தங்கச்சி ஏதோ.. என் பயத்துல கொஞ்சம் அடங்கியிருக்கா.. இல்லேன்னு வெய் .. இவ அவளுக்கு மேல.. ஆடுவா..! எங்கம்மா பண்ற அட்டகாசம் தாங்கமத்தான் எங்கப்பன் வேற ஒருத்திய கூட்டிட்டு ஓடிட்டான்..”