நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பார்வையின் வீச்சை அவளால் தாங்க முடியவில்லை. தலை குனிந்தாள்.
ஒன் புருஷன் யோக்கியதை வந்தவுடனே தெரிஞ்சிருச்சி. அதுனால, அந்த வக்கிரம் புடிச்சவன் நடந்துகிட்டதில் எனக்கு ஆச்சரியம் வர்லை. ஆனா, நீ பொம்பளைத்தானே? நீயே கேவலம் காசுக்காக எப்டியெல்லாம் நடந்துகிட்ட? அசிங்கமாயில்ல உனக்கு?
நீ பண்ண பாவம்தாண்டி, உன்னை வாட்டுது. எந்தப் பணத்துக்காக எல்லா அநியாயத்தையும் கண்டுக்காம இருந்தியோ, அதே பணத்தை வெச்சுதான் நீயும் ஏமாந்திருக்க. அதுவும் யாரோட தப்பை கண்டுக்காம இருந்தியோ, அவனே உன்னை ஏமாத்திருக்கான்.
ஆவேசத்தில் வந்த என்னுடைய வார்த்தைகளும், அது கொடுத்த வலியும், எனக்கு உண்மை தெரியும் என்பதும் அவளுக்கு மிகப்பெரிய மனச்சோர்வையும், அவமானத்தையும் கொடுத்தது. அவள் சிலை போல் இருந்தாள். சிறிது நேரம் கழித்து கேட்டாள்.
எல்லாம் உண்மையும் தெரிஞ்சும் ஏன் என்கிட்ட உண்மையைச் சொன்ன? என்னை வெச்சு ஏதாச்சும் ப்ளான் பன்றியா?
ஹா ஹா ஹா! ஏண்டி, என் ரேஞ்சு என்னான்னு நினைச்சிட்டிருக்க? உன் புருஷனை விட 100 மடங்கு பணத்துலியும், செல்வாக்குலியும் பெரிய ஆளு. உக்காந்த இடத்தில இருந்து ஒரு ஃபோன் பண்ணியிருந்தா, நீயும், உன் புருஷனும் அட்ரஸே இல்லாம போயிடுவீங்க. இதுல உன்னை வெச்சு ப்ளான் பண்ணனுமா? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா? உனக்குன்னு ஏதாவது ஒர்த்து இருக்கா?
நான் வந்ததே உன்னையும், உன் புருஷனையும் எச்சரிச்சுட்டு போலாம்னுதான். ஆனா வந்து பாத்தா, உன் பொழைப்பு ரொம்பக் கேவலமா இருந்தது. அதுனாலத்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். இல்லாட்டி, இந்நேரம் சீனே வேற.
என் நேரம் பாத்தியா, ஹெல்ப் பண்ண வந்த என்னை, நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க. பழிவாங்க வேண்டிய உன்கிட்ட, நானும் பதில் சொல்லிட்டிருக்கேன். காமெடியா இல்ல? வேற யாராவதா இருந்த, இந்நேரம் என் கால்ல உழுந்து என்கிட்ட நன்றி சொல்லியிருந்திருப்பாங்க. ஆனா நீ கொஸ்டின் பண்ணிட்டிருக்க…
என் பேச்சு சரியாக அவளைத் தாக்கியிருந்தது. கையறுநிலையின் உச்சத்தில் அவள். காப்பாற்ற வேண்டிய கணவன், அவளை ஏமாற்றுகின்றான். உறவுகளை, அவள் ஏமாற்றியிருக்கிறாள். பழிவாங்க வந்தவன் பாவம் பார்க்கிறான். எவ்வளவு பெரிய அவமானம்?
அவள் கண்களில் தொடர் கண்ணீர்…

Next part upload pannunga