ஆனால் நான் எல்லாவற்றையும் என்னுள்ளேயே வைத்துக் கொண்டதால், வெளியே திறமையானவனாக, தைரியமானவனாக இருந்தாலும், உள்ளுக்குள் முக்கிய உறவுகளிடத்தில் ஒரு தயக்கத்தை கொடுத்திருந்தது. அதுதான், என் அக்காவையே நான் நம்புவதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொண்டது! எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தயக்கம்தான், அந்தத் தோல்வி பயம் தான், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் என்னைத் தோற்கடித்தது.
இந்த உளவியல் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு ஒரு அவுட்லெட் வேண்டும். அதற்கு என் மனதுள் குடைந்து கொண்டிருக்கும், என்னை, என் தந்தையும், சித்தியும் ஏமாற்றி விட்டார்களே என்கிற கோபம் தணிய வேண்டும்! என்னுடைய கோபத்தையும், அது கொடுத்துக் கொண்டிருக்கும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் டார்கெட்டுகள்தான் ஹரீசின் சித்தப்பாவும், சித்தியும். இது ஒரு வகையில் என் அக்காவுக்கான சொல்யூஷன் மட்டுமல்ல. எனக்கான ட்ரீட்மெண்ட்டும் கூட.
ஆரம்பத்திலிருந்தே, ஹரீசின் சித்தப்பாவும் சித்தியும் ஏனோ, என் அப்பாவையும், சித்தியையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதுவும் முழுக் கதையையும் கேட்ட பின், அந்தத் துரோகமும், பெண்களை ஏமாற்றும் பேக்கிரவுண்டும், அதற்கு அமைதியாக ஒத்துழைக்கும் எனது சித்தியைப் போன்ற, ஹரீசின் சித்தியும், எல்லாம் சேர்ந்து முழுக்க அவர்களாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, இவர்களைப் பழிவாங்குவது ஒரு வகையில், எனக்கு மட்டுமே தெரிந்த, எனது உளவியல் சிக்கலுக்கான தீர்வாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பினேன். அதனால்தான், அவர்களுடைய பாதையிலேயே சென்று அவர்களை வேட்டையாட விரும்பினேன்.
என்னுடைய யோசனைகளை மோகனது குரல் இடைமறித்தது.
இப்ப கண்டிப்பா நம்புறேன் மதன். நீயும் நம்ம க்ரூப்புன்னு தெரிஞ்ச பின்னாடி எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்பதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!
சந்தோஷத்தில் பேசிய அவனது குரல் சொல்லியது, அவன் முழுதாக என்னை நம்ப ஆரம்பித்து விட்டதை!
அதை அதிகப்படுத்த, எனது தூண்டிலைப் போட்டேன்.
அதுக்குள்ள சந்தோஷப்படாதீங்க! சீக்கிரம் ஹரீஸ்கிட்ட விஷயத்தை சொல்ல டைம் பாக்குற அவங்ககிட்ட இருந்து எப்டி எஸ்கேப் ஆகப் போறீங்க? ம்ம்ம்?
Next part upload pannunga