காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

மன்னிப்பு என்பது உன்மையானதாக இருக்க வேண்டும்! அப்போதைக்கு மன்னித்து விட்டு, பின், பல முறை சுட்டிக் காட்டுவது, தவறு செய்தவர்களுக்கு குற்ற உணர்ச்சியையும் போக்கி விடும், அப்படித்தான் செய்வேன், நீ யோக்கியமா போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி விடும்!

மாறாக, அதை முழுக்க மன்னித்து, மறந்து விடுவது, மறைமுகமாக, தவறு செய்தவர்களுக்கு, அவர்களது தவறை ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும்! இது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான சூட்சுமம்!

இந்த சூட்சுமத்தை, நான் மிகச் சரியாக புரிந்து கொண்டேன், பிடித்துக் கொண்டேன்!

எல்லாவற்றுக்கும் மேல், என் ஹரீஸ், என் மேல் காட்டும் எல்லையற்ற அன்பைத் தவிர மிகப் பெரிய சந்தோஷம், வேறு என்ன எனக்கு இருக்கப் போகிறது?

நான் சரியாக நடந்து கொள்ளாதவளாக, எண்ணியிருந்த போதே, என் நலம் விரும்பிய, என்னை அமைதியாக திருத்த முயன்றவன், நான் தவறே செய்யாதவள் எனத் தெரியும் போது என்னை மகாராணியாகவே நடத்துவான்! அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

சுய மரியாதை பேசி, நல்ல வாழ்க்கையை இழப்பதுதான் புத்திசாலித்தனம் என்றால், விட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அடையும் முட்டாளாகவே இருந்து விட்டுப் போகிறேன்!

எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை மற்றவர்களுக்கு அன்பை வழங்கியவளுக்கு, அள்ளி அள்ளி காதலை வழங்க, என் மணவாளன் காத்திருக்கும் போது, முடிந்து போன விஷயத்திற்க்காக ஏன் இந்த மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.