அப்புறம் வீட்டிற்குச் சென்றோம்.
ஹரீஸை வெளியேயே இருக்க வைத்து விட்டு, நான் மட்டும் அவள் அறைக்குள் சென்றேன். அவள் கொஞ்சம் சோகமாய் இருந்தாள்.
ஹாய்! ஹாப்பி வெட்டிங் டே!
தாங்க்ஸ்டா!
என்ன ரொம்ப சோகமா இருக்க?
இருக்காதா, அவரு ஃபோன் பண்ணுவாருடா! நீ, காலைலியே ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்லிட்டு, ஃபோனையும் புடுங்கிட்டு போயிட்ட. எனக்கு அவர்கிட்ட பேசனும்டா!
பேசலாம், பேசலாம். அவரும் கொஞ்சம் தவிக்கட்டும். நீ சொன்னப்ப எல்லாம் கேட்டிருந்தா, இன்னிக்கு இந்த நிலைமை இல்லீல்ல. கொஞ்சம் அவரும் தவிக்கட்டும்.
ப்ச்… இப்ப நீ ஃபோனைத் தரப் போறியா இல்லியா?
மாட்டேன்!
டேய், ப்ளீஸ் டா!
சும்மா அந்தாளுக்காக ஓவரா…
ஏய், நீ ஃபோனைக் கொடுக்காம கூட இரு. ஆனா, அதுக்காக, அவரை மரியாதையில்லாம, அதுவும் என் முன்னாடியே பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காத!
அவள் கோபத்தில் பட படத்தாள்!
எனக்கும் கஷ்டமா இருந்தது. ரொம்ப விளையாடுறோமோ?
பார்றா, அவரைச் சொன்னா வர்ற கோபத்தை?
ஆமா, நீ என் மேல எவ்ளோ பாசமா வேணா இருக்கலாம். என்னை எவ்ளோ வேணா திட்டலாம். ஆனா, அவரைத் திட்டறதுக்கு உனக்கு அனுமதி கிடையாது. எனக்கு ஃபோனே வேணாம்…
நான் சிரித்துக் கொண்டே சொன்னேன், நான் ஃபோன்லாம் கொடுக்க மாட்டேன். ஆனா, அதுக்குப் பதிலா ஆளையேக் கூட்டிட்டு வந்திருக்கேன். நேர்லியே பேசிக்கோ!
எ… என்னடா சொல்ற!
ஹாரீஸ், உள்ள வாங்க! நான் கிளம்பறேன்!

Next part
Super next part upload pannunga