அக்காவின் பார்வையில்!
உள்ளே நுழைந்த ஹரீசையே விழியகலப் பார்த்திருந்தேன்! கலைந்த தலையும், வருத்தமும், குற்றவுணர்ச்சியும் தோய்ந்த முகமும், தளர்ந்த நடையும் சொல்லியது, அவனுக்கு முழு விஷயமும் தெரிந்து விட்டது என்று!
அருகில் வந்த அவன், மிகப் பாவமாக என்னைப் பார்த்தான். அவன் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
எ… என்னை மன்னிச்சிரும்மா!
அவனையே வெறித்துப் பார்த்தேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது! ஒற்றை வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிடுமா என்ன? உதட்டைக் கடித்துக் கொண்டேன்!
உ… உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி இருக்கான்னு கூடத் தெரியலை. ஆனா…
அவனுக்கு அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை! மெல்ல, நடுக்கத்துடன் என் கைகளைத் பிடித்தான்.
அவன் பிடித்தவுடன் என் கண்களிலிருந்து கண்ணீர் அதிகமானது. மெல்லிய விம்மல் வந்தது! அழுகையினூடே சொன்னேன்.
நான் சொன்னப்ப என்னை நம்பலீல்ல??
என் வார்த்தை அவனை அடித்தது. அவனால், என் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
நா… நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? அவன் பண்ணதை விட, நீங்க என்னை நம்பாதது, எனக்கு எப்புடி இருந்தது தெரியுமா?
அவன் உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டு நின்றான். கண்களை அழுந்த மூடித் திறந்தான். கையை இறுக்க மூடிக் கொண்டான். அவனால், என் சொற்களின் வீரியத்தை தாங்க முடியவில்லை.
எ… என்னை மன்னிச்சிரும்மா! என்னையே பாவமாகப் பார்த்தான்.
நா… நான் சூசைட் வரைக்கும் போயிட்டேன் தெரியுமா? மதன் மட்டும் இல்லாட்டி… இதைச் சொல்லும் போது என் உடலும், வார்த்தைகளும் கூட நடுங்கியது!
இந்த வார்த்தையை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை இழுத்து அணைத்துக் கொண்டான். இன்னொரு முறை இ… இப்பிடிச் சொல்லாதம்மா! ப்ளீஸ்!
என்னாலும் தாங்க முடியவில்லை! நான் எதிர்பார்க்கும் காதல் கிடைத்து விட்டது! ஆனால் அதற்கு நான் அனுபவித்த மன வலிதான் தாள முடியவில்லை! அவன் நெஞ்சிலேயே அழுதேன். அவன், நெஞ்சிலேயே குத்தினேன்! அவனையே அடித்தேன்
போடா! ஏன் என்னை புரிஞ்சிக்கலை! நீயே புரிஞ்சிக்காட்டி நான் யார்கிட்ட போவேன்?

Next part
Super next part upload pannunga