கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“நல்லா கேட்டுக்க; என் கையை புடிச்சு, கூட பொறந்த, என் ஆசை அண்ணன் எதிர்ல
“ஆமென்” ன்னு சொன்னானே; அப்போத்தான்…”

“அப்படியா …?”

“ஆமாம் … அப்படித்தான் …!”

செல்வாவையும், சீனுவையும், மீனா, தனியாக விட்டு சென்றதிலிருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் இனம் தெரியாத உணர்ச்சிகள் எழுந்து பின் மெதுவாக அடங்கின. மீண்டும் வேகமாக எழுந்தன. மெல்ல மெல்ல அடங்கின.

ஒருவரிடம் ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நண்பர்கள் இருவருமே மனதுக்குள் தவித்துக்கொண்டிருந்தார்கள். நேருக்கு நேர், தங்கள் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதை அவர்கள் கவனமாக தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்வா இந்த விளையாட்டில் முதலில் களைத்துப்போனான்.

“உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை…”

மீனாவின் இந்த ஒரே ஒரு வார்த்தை, அந்த வார்த்தையில் இருந்த அப்பட்டமான உண்மை, செல்வாவை ஒரு நொடி நிலை குலைய வைத்தது. மீனா தன் ஆடைகளை உருவி நிர்வாணமாக நடுத்தெருவில் நிற்க வைத்ததைப் போல் அவன் உணர்ந்தான். மீனா உண்மையைத்தானே சொல்றா? அவளுக்கு என்னை விட சீனு மேல ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு; நிஜமாவே சீனு மேல எனக்கு அக்கறை இருந்திருந்தால் அவன் குடியை நிறுத்தறதுக்கு இத்தனை நாள் உருப்படியா எதையாவது ஒரு வழியைத் தேடியிருப்பேனே?

அண்ணன் செல்வாவும், அவனுடைய இளவயது தோழன் சீனுவும், மீனாவை மிகவும் நன்றாக அறிந்தவர்கள். மீனா எந்த ஒரு விஷயத்திலும் தான் எடுத்த ஒரு முடிவை மாத்திக்கிட்டதேயில்லை. இனி அந்த ஆண்டவனே வந்தாலும், சீனுவுக்காக அவள் எடுத்துள்ள முடிவையோ, அவள் மனதை மாற்றுவதென்பதோ முடியாத காரியம், என்பது அந்த இருவருக்குமே தெரிந்திருந்தது.

இருபது வருட நட்பில், இது போன்ற ஒரு தருணத்தை, நண்பர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. தங்களுக்கிடையில் இருந்த பரிசுத்தமான, களங்கமற்ற, தூய்மையான நட்பு, இப்போது வேறு ஒரு பரிமாணத்துடன், இதுவரை அவர்கள் நினைத்தே பார்த்திராத, வேறு ஒரு திசையில் பயணிக்கப் போவதை, அவர்கள் இருவரும் அந்த கணங்களில் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

இந்தப் பாவி இனிமே தண்ணி கிளாசை, தன் கையில எடுக்காம இருந்தான்னா, என்னால முடியாத காரியத்தை என் தங்கச்சி சாதிச்சுட்டான்னு, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா இதுக்கான வெலை என் தங்கச்சியோட வாழ்க்கைன்னு நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

“ம்ம்ம்ம்” … என் சீனு ஆயிரத்துல ஒருத்தன். அவனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனை கொறை சொல்லணும்ன்னு யாராவது நெனைச்சா, இந்த ஒரு விஷயத்தை தவிர வேற எதை அவன் கிட்ட காட்டமுடியும்? சீனு மீனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானா? சீனு என் தங்கச்சி மீனாவை சந்தோஷமா வெச்சுப்பானா? சீனுவை இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என் வாயைவிட்டு இதைப் பத்தி கேட்டுத்தான் ஆகணும்…

“மாப்ளே!, மாப்ளே”ன்னு சீனுவை நான் எவ்வளவு நாளா அர்த்தமேயில்லாம கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்? மீனா அந்த சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை, இவனை ஒரே செகண்ட்ல இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கி, எனக்கு சொல்லி கொடுத்துட்டா! செல்வா, முகம் தெரியாத ஒருத்தனை நீ ஏண்டா மாப்ளேன்னு கூப்பிடப் போறே; இருபது வருஷமா நீ தினம் பாத்துக்கிட்டு இருக்கற இவனையே நீ மாப்ளேன்னு கூப்பிடுடான்னு, மீனா அடிச்சு சொல்லிட்டா! இனிமே நான் இவனை என்னன்னு கூப்பிடறது? வீட்டு மாப்பிள்ளையை