கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

மீனாவின் இந்த மெல்லிய தேகத்துக்குள் இத்தனை உறுதியான மனம் ஒளிந்து கொண்டிருக்கிறதா? அந்த மென்மையான மனதில், என்னைப்போல ஒரு ஆண் மகன் மேல, என்னுடைய பொறுப்பில்லாத நடத்தையை, அதனால் அவளுக்குள் ஏற்படும் கோபத்தை, எரிச்சலை, இவளால இத்தனை உரிமையோட காட்ட முடியுமா? மீனா என் மேல ஏதோ ஒரு முழு சொந்தமும், உரிமையும் இருக்கற மாதிரி என்னை இன்னைக்கு தாளிச்சு கொட்டறாளே?

என் மேல் அவளுக்கு இருப்பதாக நினைக்கும் அந்த உரிமை எது? அந்த உரிமைக்கு என்னப் பேரு? என் மேல் இவளுக்கு இத்தனை அக்கறையா? எதனால இந்த அக்கறை? இந்த அக்கறைக்கு என்ன அர்த்தம்? இவள் காட்டும் இந்த அக்கறைக்கு நான் தகுதியுள்ளவன்தானா? சீனுவின் மனதில் கடலலைகளைப் போல் பலவித எண்ணங்கள் எழுந்து அவன் மனதின் மேல் தட்டுக்கு வந்து மோதின. அவன் பேசமுடியாமல் மரம் போல் நின்றான்.

சீனுவின் கண்கள் மீண்டும் சுழன்று சுழன்று மீனாவின் முகத்தில் சென்று படிந்தன. தன் பார்வையை அவள் விழிகளில் நிலைக்க விட்டான். மீனாவின் விழிகள் இலேசாக நனைந்திருந்தன. இரு ஜோடி கண்கள் ஒன்றைஒன்று கூர்ந்து நோக்கின. சீனுவின் கூர்மையான பார்வையை சந்திக்கமுடியாமல், மீனா தன் விழிகளை ஒரு கணம் மூடித்திறந்தாள். மீனாவின் மனம், சீனுவின் முகத்தை பார் பார் என தூண்ட, அவள் மூடிய தன் விழிகளை மெல்ல திறந்தாள்.

தங்கள் இதயங்களில் ஏதோ ஒன்று மெல்ல மெல்ல இளகுவதை அத்தருணத்தில், இருவருமே பரஸ்பரம் உணர்ந்தார்கள். இருவரின் உதடுகளும், தத்தம் உதடுகளின் மேல் படிந்திருந்தன. இருவரின் உதடுகளுக்கு உள்ளிருந்த நாக்கு உலரத்தொடங்கியது.

மீனாவை இழுத்து தழுவி, தன் பரந்த மார்பில் புதைத்துக்கொள்ள சீனுவின் மனம் விழைந்தது. அவன் கரங்கள் அவளை உடனே இறுக்கி அணைத்துக்கொள்ள துடித்தன. சீனுவின் கள்ளமில்லாத மனதில் நிறைந்திருந்த கண்ணியம் அவனைத் தடுக்க அவன் செயலிழந்து நின்றான்.
சீனுவின் மனசு, அவன் அனுமதியின்றி அவன் ரசித்து கேட்கும் பாடல் ஒன்றை அதுவாகவே இசைக்க ஆரம்பித்தது. செல்வா சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்ச காலத்தில் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவான். அவன் பாடறதை கேட்டு கேட்டு, சீனுவும் அந்த பாட்டை வெகுவாக ரசிக்க ஆரம்பித்திருந்தான்.

பார்வை ஒன்றே போதுமே!
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
பேசாத கண்ணும் பேசுமா?
பெண் வேண்டுமா? பார்வை போதுமா?
பார்வை ஒன்றே போதுமே!

செல்வா இந்தப் பாட்டை பாடினதுல அர்த்தமிருக்கு. ஆனா இந்தப்பாட்டு என் மனசுல இப்ப ஏன் ஒலிக்குது? சீனு திகைத்தான்.

சே.. சே… இது என்ன அபத்தமான எண்ணம்? மீனாவைப் பாத்து என் மனசுல இந்த மாதிரி எண்ணமா? இந்த எண்ணம் என் மனசுக்குள்ள வரது சரிதானா? இந்த எண்ணம் எனக்கு வந்ததே தப்பு? நான் குடிச்சிருக்கறதுனால இந்த எண்ணம் என் மனசுக்குள்ள இன்னைக்கு வந்திருக்கா? இல்லையே? என் போதை தெளிஞ்சு நான் சுய நினைவோடத்தானே இருக்கேன்? சுய நினைவோட இருக்கற என் மனசுக்குள்ள இந்த எண்ணம் வந்திருக்குன்னா, இந்த எண்ணத்துக்கு பேரு என்ன? காதல்? இதுக்குப்பேருதான் காதலா? சீனு தன் தலையை வேகமாக இடதும் வலதுமாக ஆட்டி தன் மனதில் எழுந்த அந்த எண்ணத்தை அதே நொடியில் வேரோடு கிள்ளி எறிய முயற்சி செய்தான். தோற்று நின்றான்.