கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“நான் சந்தோஷமா இருக்கேன்; பாடறேன்”

“நீ செய்தது சரியாடி?”

“ஊர்ல; உலகத்துல, யாரும் செய்யாததையா நான் செய்துட்டேன்?”

“காலையில எழுந்ததும், உன் சீனு, சீனுங்கறியே, அவனைப் பக்கத்துல வெச்சிக்கிட்டு, உன் அம்மா மூஞ்சை உன்னால நேராப் பாக்கமுடியுமா?”

“பாத்துத்தானே ஆகணும்”

“நீ செய்தது அப்ப சரிங்கறே?”

“ஒரு வயசு பொண்ணு, தன் மனசுக்கு பிடிச்சவனுக்கு காத்துல முத்தம் கொடுக்கறது தப்பா?”

“இப்ப உன் அண்ணன் பக்கத்துல இருந்தான்… காத்துல முத்தம் குடுத்தே?”

“ஆமாம் …”

“நீ தனியா இருந்து உன் சீனு, என் ஒதட்டுல ஒண்ணு குடுடின்னு கேட்டா?”

“இது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான் … ஒத்துக்கறேன்..”

“பதில் சொல்லுடி?”

“ஒதட்டுல முத்தம் குடுத்தா தப்பா?”

“அதை நீதான் சொல்லணும்… தப்பா … சரியான்னு? நீதானே அந்த வயசு பொண்ணு!”

“தப்பு; சரிங்கறது எல்லாம், அவரவர்களுடைய மனசாட்சியைப் பொறுத்து இருக்கு”

“உன் மனசாட்சி என்ன சொல்லுது?”

“நான் படிச்சு முடிச்சு, சுகன்யா மாதிரி ஒரு நல்லவேலைக்குப் போய், என் சொந்த கால்லே திடமா நிக்கற வரைக்கும், சீனுவை கொஞ்ச தூரமா வெக்கறதுதான் சரின்னு தோணுது..”

“வெரி குட் … மீனா …”

“போதுமே … இன்னும் வேற ஏதாவது கேள்வி பாக்கியிருக்கா?”

“அப்போ, கடைசிவரைக்கும் அவன் கூட நிக்கப்போறே?”

“அதிலென்ன சந்தேகம் … அவன் கையை நான் புடிச்சாச்சு; இனிமே விடறங்கறதுக்கு பேச்சுக்கே எடமில்லே.. அவனும்
“அப்படியே ஆகட்டும்” ன்னு சத்தியம் பண்ணிட்டான்… அவன் எனக்குத்தான்; நான் அவனுக்குத்தான்…”

“சீனு, ஒரு வேகத்துல உன் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கலாம்; ரெண்டு வாரம் கழிச்சு திருப்பியும் பாட்டிலைத் தொறந்து தண்ணி பூஜைக்கு உக்காந்தான்னா என்னடி பண்ணுவே?”

“செருப்படி வாங்குவான் என் கிட்ட..?”

“ம்ம்ம்… அவ்வளவு நம்பிக்கையா அவன் மேல உனக்கு?”

“வாழ்க்கையே நம்பிக்கைங்கற அஸ்திவாரத்துக்கு மேலேதானே நிக்குது?”

“சரிடி… இன்னைக்கு நீ யார் எது சொன்னாலும் கேக்கப்போறது இல்லே?”

“இன்னைக்கு இல்லே! இனிமே என்னைக்குமே யார் சொன்னாலும் கேக்க மாட்டேன்; அவன்தான் என் படுக்கைக்கு வரப்போற ஆம்பிளை; நான்தான் அவன் கூட படுக்கப்போறவ; இதுல எந்த மாத்தமும் கிடையாது”

“இதை அவனும்தானே சொல்லணும்?”

“அவன் என் கிட்ட சொல்லிட்டான்”

“எப்போ சொன்னான்?”