கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“சரி … சரி … மாடிக்கு போகும் போது கையோட குடிக்கறதுக்கு தண்ணியை எடுத்துகிட்டு போய் சேருங்க; போனமா, படுத்தமான்னு ரெண்டு பேரும் நேரத்துக்கு தூங்கற வேலையைப் பாருங்க; அப்புறமா என்னை ஒரு டம்ளர் தண்ணி குடுடி … ஒரு கப்பு டீ போட்டு குடுடீன்னு தூங்கறவளை எழுப்பினா எனக்கு கெட்ட கோவம் வரும் … இப்பவே சொல்லிட்டேன் …” வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

“உன்னை யாரும் இதுக்கு மேல எதுவும் கேக்கமாட்டோம் … நீ நிம்மதியா தூங்குடியம்மா…” செல்வா கை கழுவ வாஷ்பேசின் பக்கம் நகர்ந்தான். தன் கையை கழுவி, வாய் கொப்பளித்த செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்தான்.

“சீனு, ஐயாம் சாரி … உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் … என்னை மன்னிச்சுடுங்க; உங்க மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்..” மீனா வேகமாக சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள்.

சீனு, மீனாவை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். அவன் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. நிமிர்ந்தவன் தன் தலையை வேகமாக குனிந்து கொண்டான். இதுவரை அவன் மனதுக்குள் அடைபட்டிருந்த இனம் தெரியாத துக்கம் மெதுவாக பீறிட்டுக்கொண்டு கேவலுடன் வெளியில் வந்தது. அவன் உடல் வேகமாக குலுங்கியது. சீனு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தான்.

கல்லுளிமங்கன் சீனுவா அழறான்? எப்பவும் அடுத்தவங்களை அழவெச்சுப் வேடிக்கைப் பாத்துத்தானே இவனுக்குப் பழக்கம்! மீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவன் அழுவதைப் பார்த்த மீனாவின் மனம் பதைத்து, மேனி நடுங்கியது. என் சீனு அழறான். என் சீனு அழறதை என்னால பொறுத்துக்க முடியாது. அவன் அழுகையை நிறுத்தணும். என்ன செய்யறது? செல்வா இன்னும் டாய்லெட்டிருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மீனா நின்ற இடத்திலிருந்தே தன் பெற்றோர்களின் அறையை ஒரு முறை எட்டிப்பார்த்தாள். அவர்களின் அறைக்கதவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.

மீனா, சீனுவை நெருங்கினாள். தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்த சீனுவின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி நிமிர்த்தினாள். கண்களால் பேசினாள். தன் தலையை ஆட்டி அழாதே சீனு … சீனுவின் கண்களை தன் வலது கையால் துடைத்தாள். சீனுவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன. மீனா அவன் வாயை தன் சிவந்த உள்ளங்ககையால் பொத்தினாள்.

“அழாதே சீனு! … நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல்லா? … ஏன் அழறேப்பா? அவள் குரல் தழுதழுத்தது.

“மீனா …. சத்தியமா நான் இனிம குடிக்கமாட்டேன்… என்னை நீ நம்பு மீனா…” சீனு கேவலுடன் குளறினான்.

“சரி … நான் உங்களை நம்பறேன்… நீங்க இப்ப அழாதீங்க … நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை.” மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள்.

சீனுவின் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த மீனா, அவன் முகத்தை திருப்பி தன் வயிற்றில் அழுத்திக் கொண்டாள். மீனாவின் வலுவான பருத்த இடது தொடை அவன் தோளை உரசிக்கொண்டிருந்தது. இத்தனை நெருக்கத்தில், ஒரு இளம் பருவப்பெண்ணின் உடலை, அந்த உடல் தரும் இதமான வெப்பத்தை சீனு இதுவரை உணர்ந்ததில்லை. மீனாவின் உடல் வாசம் அவன் நாசியில் வேகமாக ஏறியது. சீனுவின் உடல் சிலிர்த்தது. அவன் தேகம் காற்றில் பறந்துகொண்டிருந்தது.