கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

சீனு, வீட்டினுள் நுழையும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை, தன் உள்ளுணர்வால் உணர்ந்த மீனா, ஒரு வினாடி நின்றாள். நின்றவள் மெல்ல திரும்பி, தான் நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில், கண்களில் பாசம் பொங்க சீனுவை பார்த்தாள். அவள் கண்களில் இன்றுவரை இல்லாத ஒரு திருட்டுத்தனம் இப்போது குடியேறியிருந்தது.

முதலில் ஓரக்கண்ணால் செல்வாவைப்பார்த்தாள். அவன் தலை குனிந்து உட்க்கார்ந்திருக்க, மீனா, ஆசுவாசத்துடன், தன் மெல்லிய செவ்விதழ்களை குவித்து முத்தமிட்டு, சீனுவின் புறம் அந்த முத்தத்தை காற்றில் தள்ளிவிட்டாள். சீனு செய்வதறியாது, மனம் சிலிர்த்து, மீனா தனக்களித்த முதல் முத்தத்தை தன் இதயத்தில் சேகரித்துக்கொண்டு, செல்வாவின் எதிரில் படிக்கட்டில் மெல்ல உட்க்கார்ந்தான்.

தன் தங்கை நடத்திய நாடகத்தின் அர்த்தம் மெல்ல மெல்ல செல்வாவுக்கும் புரிய ஆரம்பித்திருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்த மீனாவையும், தன் எதிரில் படிக்கட்டில் அமைதியாக அமர்ந்திருந்த சீனுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சீனுவுக்கு, மீனா காதலுடன் முத்தமொன்றை காற்றின் வழியே அனுப்பிவிட்டு, மனதில் கிளுகிளுப்புடன், கிச்சனுக்குள் நுழைந்தாள். வெங்காய சாம்பார் சூடாக ஆரம்பிக்க, கிளம்பிய வாசம், வெராண்டாவில் தனித்துவிடப்பட்டிருந்த செல்வா, சீனுவின் மூக்கைத் துளைத்தது.

சீனு நான் சொன்னதை கேட்டுட்டான். நான் சொன்னதும், கொஞ்சம் கூடத் தயங்காம என் கையைப் புடிச்சு சத்தியம் பண்ணானே? ஆம்பிளைன்னா இவன் தான் ஆம்பிளை. பொம்பளை மனசை, என் பெண்மையை மதிக்க தெரிஞ்ச இவன்தானே உண்மையான ஆம்பிளை! சீனு என் ஆம்பிளை!. மீனாவின் மனம் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தது.

என் சீனு பசியோட இருக்கான். அவனுக்கு வெங்காய ஊத்தப்பம்ன்னா ரொம்ப பிடிக்கும்! ரெண்டு நிமிஷ வேலை; மீனா தன் மனதில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த உவகையால், காதலால், உடலும் மனமும்
“என் சீனு, என் சீனு,” எனக்கூவ, கைகள் அவள் மனதின் கிளுகிளுப்பில் பங்கெடுக்க, அவள் வேக வேகமாக வெங்காயம், பச்சை மிளாகாய், இஞ்சி என எல்லாவற்றையும் மெலிதாக அரிந்து, அதனுடன் கொத்து கறிவேப்பிலையை உறுவி போட்டாள். தோசை மாவில் எல்லாவற்றையும் கொட்டி கலந்து ஊத்தப்பமாக வார்த்துக் ஹாட் கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

இவ கைகளுக்கு நாங்க எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டோம்? மீனாவின் உதடுகளும், அவள் உள்ளத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்று, காதல் வயப்பட்டிருந்த அந்தப் பருவப்பெண்ணின் உள்ள உணர்வுகளுக்கு ஏற்றவாறு பாடல் ஒன்றை முணுமுணுத்தன.

“காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்; காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்;
சிரித்தாய் இசை அறிந்தேன்; நடந்தாய் திசை அறிந்தேன்;
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்; கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்; ஆழகாய் அய்யோ தொலைந்தேன்;”

மனிதனுக்கு எஜமானன் அவன் மனம்தானே? மனதின் உள்ளுணர்வுதானே மனிதனை இயக்குகிறது. பண்பட்ட மணம், சீரான பாதையை மனிதனுக்கு காண்பிக்கிறது. மனதின் குரலை கேட்பதும், ஒதுக்குவதும் தனிமனிதனின் கைகளில்தான் இருக்கிறது. பாட்டை இசைத்த மீனாவின் மனமே, அவளை எள்ளிநகையாடி வேடிக்கைப் பார்த்தது. எள்ளிய மனம் அவளை மெல்ல மெல்ல கூறு போடவும் ஆரம்பித்தது.

“என்னடி! பாட்டெல்லாம் பலமா இருக்கு?