கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“சீனு… உனக்கென்னடா குறைச்சல்? எனக்கு என் தங்கையைப் பத்தி நல்லாவேத் தெரியும்; மீனா உன்னைத் தனக்குன்னு தேர்ந்தெடுத்துட்டா; இனிமே எங்க வீட்டுல, யார் என்ன சொன்னாலும் அவ கேக்கப் போறது இல்லே. யாருக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை…இதுல எந்த மாத்தமும் கிடையாது…”

“செல்வா… உங்க வீட்டுல உங்க அம்மா கையால சாப்பிட்டு வளந்தவண்டா நான்…என்னால உங்க வீட்டுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது..” சீனு தன் சிகரெட்டை அழுத்தி தேய்த்து அணைத்தான். அவன் முகத்தில் இலேசாக பயமும், மிரட்சியும் இருந்தது.

“என்னைப் பொறுத்த வரைக்கும் … மீனா உன்னை நேசிக்கறதுலயோ … அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுலேயோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே..உன்னை எனக்கு இருபது வருஷமா பாக்கறேண்டா; உன் மனசைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. மீனாவுக்கு ஏத்தவன்தான் நீ…” செல்வாவின் குரல் தெளிவாக வந்தது.

“செல்வா … மீனா எனக்கு கிடைக்கறதுக்கு நான் உண்மையிலேயே குடுத்து வெச்சிருக்கணும்; ஒண்ணு மட்டும் சொல்றேன்; ஆனா எப்பவுமே நான் அவளை இந்த மாதிரி எண்ணத்துல பாத்ததே கிடையாதுடா; என் மனசுக்குள்ளே அவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் எப்பவுமே வந்தது கிடையாது.”

சீனுவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சில வினாடிகள் தன் தலையை குனிந்து அவன் மவுனமாக உட்க்கார்ந்திருந்தவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் நடுங்கும் விரல்களால் உதடுகளில் பொருத்தி பற்றவைத்துக்கொண்டான்.

“மாப்ளே … உன்னைப் பத்தி எனக்கு தெரியாதாடா … There is no need to vindicate yourself… உன்னைப் பொறுத்த வரைக்கும் நீ இந்த முடிவை ஒரே ஒரு நொடியில எடுத்திருக்கேன்னு எனக்கு நல்லாத் புரியுது…” செல்வா ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி, பேசினான்.

“தேங்க் யூ டா … உன் அப்பாவை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்கு… இதை அவர் எப்படி எடுத்துப்பார்ன்னு தெரியலை?”

“இனிமே இதையெல்லாம் யோசிச்சு எந்த பிரயோசனமுமில்லே; மீனா என் ஒரே தங்கைடா! சீனு… நாங்க எல்லாம் அவ மேல எங்க உயிரையே வெச்சிருக்கோம்… இது உனக்கு நல்லாத் தெரியும்… அவ சந்தோஷமா இருக்கணும்… அதுக்கு நீதான் உறுதியா நிக்கணும்;” செல்வாவின் குரல் இலேசாக தழுதழுத்து வந்தது.

“செல்வா … மீனாவை நான் என் உயிருக்கு மேலா பாத்துப்பேன் …அவளை மாதிரி ஒருத்தி என் வாழ்க்கைத் துணையா, எனக்கு கிடைக்க நான் ரொம்ப ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்” சீனு, செல்வாவின் முகத்தை நேராகப் பார்த்து உறுதியுடன் பேசினான்.

“மச்சான் … ஏண்டா பேசாம உம்முன்னு இருக்கே?” சீனு தன் வழக்கமான உற்சாகத்துடன் ஆரம்பித்தான்.

“அம்மா இன்னைக்கு காலைல சுகன்யாவை தன்னோட மருமகளா ஏத்துக்கறேன்னு சொல்லிட்டாங்கடா..”

“இவ்வளவு நேரம் கழிச்சு இந்த குட் நியூஸை எனக்கு நீ சொல்றே ..ம்ம்ம்” சீனு செல்வாவின் கையை மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

“நீ வந்ததுலேருந்து மீனா என்னை எங்கடா பேசவிட்டா?”

“இதுக்கு ஏண்டா நீ இப்ப ஒப்பாரி வெக்கிறே?”

“சம்பத்துன்னு ஒரு கம்மினாட்டி என்னை இன்னைக்கு ரொம்பவே கலாய்ச்சுட்டாண்டா”

“ம்ம்ம்… யார்ரா அவன்? பேரை கேட்ட மாதிரி இல்லையே?”

“அம்மா விருப்பத்தையும் நான் சுகன்யாவோட மாமா ரகுகிட்ட மதியம் சொல்லிட்டேன்…”

“விஷயத்துக்கு வாடா…”

“இந்த சம்பத்து சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறானாம்…”

“சரி … அவன் என்னா சுகன்யாவை உங்கிட்ட தானமா கேட்டானா? நீ என்னா கொடை வள்ளல் கர்ணன் மாதிரி வாடா வந்து வாங்கிக்கோடான்னு சொல்லிட்டியா?”

“சுகன்யாவுக்கு நான் அத்தைப் பையன் … அவளுக்கு நான்தான் முறை மாப்பிள்ளைன்னான்”

“எங்கடா இருக்கான் அவன்? பொழுது விடிஞ்சதும் போய் என்னா ஏதுன்னு சரியா விசாரிச்சிட்டு வரலாம்…”