கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

சீனு என் கன்னத்தை கிள்ளியிருக்கான். தலையில குட்டியிருக்கான். ஆனா அப்பல்லாம் எனக்கு கிடைக்காத இந்த சுகம், இப்ப மட்டும் எங்கேயிருந்து வந்தது? சீனு இன்னைக்கு என்னை மிக மிக மென்மையா தொட்டப்ப வந்த சுகம், என் மேனியை சிலிர்க்க வெச்சு, எங்கேயோ கொண்டு போகுதே?

எங்கள் இருவரின் இந்த தொடுகை எங்கே போய் முடியப்போகுது? தொடுதல் முக்கியமில்லை. தொடுபவர்கள் முக்கியமாகிறார்கள். தொடுபவர்களின் உள்ள உணர்ச்சிகள் முக்கியமாகிறது. தொடுதலின் ரகசியம் புரிந்த மீனா நீண்டப் பெருமூச்செறிந்தாள்.

மீனா, தன் கையில் அழுந்தியிருந்த சீனுவின் கையை, தன் மென்மையான பூ போன்ற கரத்தால் ஒரு முறை வலுவாக அழுத்தியவள், மெல்லிய குரலில் முனகினாள்

“தேங்க்யூ சீனு”… அடுத்த நொடி சீனுவின் கையை உதறிவிட்டு, திரும்பி மீண்டும் வெரண்டாவில் ஏற ஆரம்பித்தாள்.

“மீனா … எனக்கு ரொம்ப பசிக்குது மீனா … சாப்பிட எதாவது குடேன்…” சீனுவின் கரகரத்த குரல் அவள் காதில் வேகமாக வந்து மோதியது. செல்வா சீனுவை வைத்த கண் வாங்கமல் பார்த்துக்கொண்டிருந்தான்.