கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

மீனா தன் இடது கையால் சீனுவின் முதுகை மென்மையாக வருடிகொண்டிருந்தாள். அவளின் வலது கை விரல்கள் அவனின் அடர்த்தியான கேசத்துக்குள் நுழைந்திருந்தன. சீனுவின் உதடுகள் அவள் அணிந்திருந்த குர்த்தாவின் மேல் பதிந்து மெல்ல அசைந்து கொண்டிருந்தது. மீனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை முழுமையாக மறப்பதற்குள், டாய்லெட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீனா சீனுவின் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு, அவனிடமிருந்து விலகி வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள்.

சீனு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக தன் தட்டிலிருந்த கடைசி விள்ளல் ஊத்தப்பத்தை சாம்பாரில் அமிழ்த்தி, தன் வாயில் போட்டு மென்றவன், கிச்சனுக்குள் தன் பார்வையை மெல்ல செலுத்தினான். மீனாவிடமிருந்து சீனுவுக்கு இரண்டாவது முத்தம் காற்றின் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வினாடியில், சீனுவுக்கும் சற்றே தைரியம் வந்து, பதிலுக்கு தன் உதட்டை குவித்து மீனாவின் பக்கம் காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்.

இன்னொரு ஆண். இன்னொரு பெண். சீனு … மீனா…! சீனுவாசன்… மீனாட்சி!. காதலர்களின் பெயர்கள் புதிதாக இருக்கலாம். காதல் புதிது அல்ல. சீனுவாசன், மீனாட்சி துவங்கியிருக்கும் இந்த காதல் நாடகம், அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். காலம் எத்தனை சீனுக்களையும், மீனாக்களையும், எத்தனை காதல் நாடகங்களையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் பெண் மோதல். அந்த மோதலின் பின் காதல். காலத்திற்கு இந்த காதல் நாடகம் புதிதல்லவே…

இந்த காலம்தானே ஓய்வில்லாமல், சுயம் எண்ணற்ற காதல் நாடகங்களை, களைப்பில்லாமல் கல்ப காலமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனிமனிதர்கள் தாங்கள் காதலிப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இதில் காலத்துக்கு கிடைக்கும் லாபம் என்ன? காலம் அந்த புதிய காதலர்களை நோக்கி மென்மையாக சிரித்துக்கொண்டிருந்தது.

“செல்வா … ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்?” சீனு, சுவரில் வசதியாக சாய்ந்து தன் இருகால்களையும் நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான். மாடிக்கு வந்ததும், இப்போது செல்வாவுக்கு எதிரில், தனிமையில், அவன் தன்னை மிகவும் சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான்.

“பேசணும்டா.. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பாக்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா…”

“ம்ம்ம் … இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே..” சீனுவின் குரல் கம்மியிருந்தது.

“மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக் கூடாது…” செல்வா லுங்கிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

“நம்ம மீனாதானேடா … என் கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான் திருந்தணும்ன்னுதானே அவ பேசினா… எனக்கு அதுல மனவருத்தம் ஒண்ணுமில்லே; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் … நிஜமாவே நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடைப்பா? என்னால இதை நம்பவே முடியலை.” சீனு பேசமுடியாமல் தடுமாறினான்.

“ஏண்டா நீ பாட்டுக்கு யோசிக்காமே … குடிக்கமாட்டேன்னு அவகிட்ட சட்டுன்னு சத்தியம் பண்ணிட்டே?” செல்வா சீனுவுக்கு எதிர் சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்தான்.

“மச்சான் … மீனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தா … அந்த நேரத்துல அவளை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்கு புரியலை… அவ கையை புடிச்சு சத்தியம் பண்றதை தவிர எனக்கும் வேற வழி தெரியலை…”

“எல்லாமே நல்லதுக்குத்தாண்டா … நீ உருப்பட்டா சரிதான்; ஆனா உன்னால இந்த குடிக்கற பழக்கத்தை சட்டுன்னு விட்டுட முடியுமா?”

“ஒரு கெட்டப் பழக்கத்தை இப்படித்தாண்டா விடமுடியும் …”

“மாப்ளே … உனக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்; மீனா தன் லைப்பையே உனக்காக பணயம் வெச்சிருக்கா; இதை மட்டும் நீ மறந்துடாதே! அவ உன்னை கொஞ்ச நாளாவே தன் மனசுக்குள்ளவே நேசிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு எனக்குத் தோணுது …”

“புரியுது செல்வா … அவ நம்பிக்கையை என்னைக்கும் நான் வீணாக்கிட மாட்டேன்! ஆனா அவ அன்புக்கு நான் லாயக்கானவனா? யோக்கியதை உள்ளவன் தானா? அதுதான் எனக்குப் புரியலை..”