கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“அவன் தான் முதலில் சொல்லட்டுமே…இல்லை அவள் தான் சொல்லட்டுமே” என்று இருவரும் ஒரு வரட்டு கௌரவத்தில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் சுபாவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதற்கு முக்கிய காரணம் வேணி. அவள் தினமும் மாலையில், அவர்கள் சந்திக்கும் வேளையில் சுகன்யாவை மாற்ற வெகுவாக முயற்சித்தாள்.
“சுகன்யா, நீ இங்க வந்ததுல இருந்து நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்…ஏண்டி சுகு, எப்பவும் இப்படி தனியா உன் ரூம்ல அடைஞ்சு கிடக்கிறியே, அந்த தனிமையிலே அப்படி என்னதாண்டி இருக்கு, இந்த வாலிப வயசுல தனிமையிலே சுகம் இல்லடி. உன் வயசுக்கேத்த ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில நாலு எடத்துக்கு போய் வாடி…வாழ்க்கையில ஒரு உற்சாகம் வரும். இல்லன்னா கொஞ்ச நாள் போச்சுன்னா உனக்கு பயித்தியம் தான் பிடிக்கும்.
“நீ சொல்லறது சரிதான் வேணி” சுகன்யா அவளை அமைதியாக அவள் சொல்வதை கேட்க்க விரும்பினாள்.
“சுகு, உனக்கு எதுல குறை… உனக்கு என்ன அழகு இல்லயா?…நல்லா படிச்சிருக்கே…நல்ல வேலையில இருக்க…கை நிறைய சம்பாதிக்கற…வேற என்ன வேணும்? இந்த உலத்துல நீயும் சந்தோஷமா இருக்கணும் மத்தவங்களயும் சந்தோஷமா வெச்சுக்கணும். அதுதான் நம்ம வாழ்க்கைக்கே அர்த்தம்.”
“வேணி என் குடும்பத்துல என் அம்மா வாழ்க்கையில ஒரு ஆணால், ஏற்பட்ட நிகழ்ச்சிகளை உன் கிட்ட சொல்லி இருக்கேன்”, சுகன்யா தழுதழுத்தாள்.
“அடியே சுகன்யா, உன் அம்மாவோட வாழ்க்கையில ஒரு ஆம்பிளையினால என்ன நடந்தது அப்படின்னு நீ எங்கிட்ட சொல்லி இருக்கே, ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா ஆம்பிளைகளும் கெட்டவங்க இல்லடி…அவங்களும் அன்புக்காவும், தங்க கிட்ட உண்மையான அன்பை காட்டற நல்ல பொண்ணுங்களைத் தேடிகிட்டுத்தான் இருக்காங்க”. உங்க அம்மாவுக்காக நான் வருத்தப்படறேன், அதுக்காக நீ இப்படி ஆண்களை பாத்து பயப்படறது தப்புன்னுதான் நான் சொல்லுவேன்.”
“சுகு…என்ன, சின்ன வயசுல, பொண்ணுங்க கிட்ட எடுப்பா இருக்கற எதையும் தடவிப் பாக்கணும்ன்னு எல்லா ஆண்களுக்கும் தோணும். அதுக்காக அலைவாங்க…அவ்வளதான்… நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு மட்டும் ஸ்மார்ட்டா இருக்கற பசங்களை பாத்தா அவனை சீண்டிப்பாக்கணும் போல தோணலயா? அப்படி தோணல்லனா உன் கிட்டதான் ஏதோ தப்புன்னு அர்த்தம். அந்த அந்த வயசுல அதது நடக்கணும். துணையில்லாத வாழ்க்கையில சுகம் இல்லடி.”
“சுகன்யா, நீ நல்லா கேட்டுக்கோ, ஒரு பூ அப்படின்னா, அதுல கண்டிப்பா வாசனை இருந்துதான் ஆகணும். ஒரு பழம் அப்படின்னா, அதுல நிச்சயமா, இனிப்பு இருந்துதான் ஆகணும்…என்ன, சில சமயத்துல இனிப்போட கொஞ்சம் புளிப்போ இல்லன்னா துவர்ப்போ சேர்ந்து இருக்கும்…அப்படி ஆயிட்டா அது… நம்ம விதி…அதுக்காக வாழ்க்கையில பழத்தை நாம சாப்பிடாமலே இருந்துட முடியுமா…பழத்தையே ருசிக்காமல் விட்டுடறது நிச்சயமா சரியான முடிவு இல்லடி”.
“கடல்…அது தூரத்துல இருந்து பாக்கும் போது எவ்வளவு அழகா இருக்கு. நம்ம எல்லோருக்குமே கடல் மேல இனம் தெரியாத ஒரு பிரியம் இருக்கு, ஒரு பிரமிப்பு இருக்கு. கிட்டப் போய் பாரு… அதனுடய பொங்கி வர அலைகள், அந்த அலைகளால் உண்டாகும் சத்தமும் ஒரு பயத்தை உண்டாக்குதா இல்லயா? ஆனா அந்த கடலே பல பேருக்கு வாழ்வாதாரமா இருக்குதானே அப்படித்தாண்டி வாழ்க்கையும்..”
“கடற்கரை சுகன்யாவிற்கு மிகவும் பிடித்த இடம். எவ்வளவு நேரம் அங்கு இருந்தாலும் அவளுக்கு அலுக்காத இடம் அதுதான்.
“செல்வாவுடன் முதல் தரம் வெளியில் செல்ல நினைக்கிறேன்; அவனை கடற்கரைக்கு ஏன் கூப்பிடக்கூடாது?” தன் செல்லை எடுத்து அவன் எண்ணை அழுத்தினாள். செல்வாவும், அவன் ஃப்ரெண்ட் சீனுவும் தெருவோரக்கடையில் காஃபி குடித்து கொண்டிருந்தார்கள். சீனுவின் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.