கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“டேய் ரொம்ப வெறுப்பேத்தாதே, இன்னும் அவ உன் கிட்ட யெஸ்ன்னு சொல்லல…நீ சரியான மொக்கை பார்ட்டிடா, சொல்லறது எல்லாம் சரி, என் மச்சானுக்கு ஒரு நல்ல பிகர் செட் ஆவுது, கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆனா யாராவது, முதல் முதலா கூட வந்தவளை, பாதியில, நடுவழியில வுட்டுட்டு வந்து கதை சொல்லுவானா, உன் ஆளு தனியா இந்த ஊருல இருக்கறவ, அவ வீட்டுக்கு போனாளா இல்லயா, கால் பண்ணி கேட்டியாடா, அவளை எப்படிடா நீ கரெக்ட் பண்ணுவே, டேய் நான் உன் உண்மையான நண்பண்டா, என் கிட்ட முதல்லயே இந்த மேட்டரை சொல்லியிருந்தா, இதெல்லாம் எப்படி டீல் பண்றதுன்னு நான் சொல்லிக் கொடுத்திருப்பேன்”
“மச்சி, நான் பண்ணது தப்புதாண்டா, கூட போய் அவளை அவ வீட்டுக்கிட்ட ட்ராப் பண்ணியிருக்கணும், நீ சொல்றது சரி மச்சான், ஆனது ஆகிப்போச்சு, இப்ப என்னை ரொம்ப ஃபீல் பண்ண வெக்கதடா, நான் அவ கிட்ட பேசிட்டு உன்னை கூப்பிடறேண்டா” அவன் பதிலுக்கு காத்திராமல் லைனை கட் பண்ணி, சுகன்யாவின் நம்பரை தேடினான். நான்கைந்து முறை அவளை கூப்பிட்ட போதும் சுகன்யாவிடமிருந்து பதிலில்லாததால் அவனை கவலை தொற்றிக்கொண்டது. இந்த பொண்ணுங்களே இப்படித்தான், அடுத்தவன் ஃபீலீங்ஸ் புரியுதா, என்ன செய்யறா, ஒரு மனுசன் இத்தனை வாட்டி ரிங் பண்றான்?
“டேய் சாப்பிட வாடா, மணி பத்தாகப் போகுது, எனக்கு தூக்கம் கண்ணை சுத்துது…காலைல இருந்து சித்த நேரம் உக்கார முடியல, ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட மனுஷன் கிட்ட படற பாடு பத்தலன்னா, பொறந்ததுங்களும் அதுக்கு மேல இருக்குதுங்க” மகனை மல்லிகா கூடத்திலிருந்தே கத்தினாள்.
“அம்மா, கொஞ்ச நேரம் உன் புலம்பலை நிறுத்தறியா, என் மூடை கெடுக்காதம்மா, எனக்கு இப்ப பசியில்ல, நான் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுடேம்மா, நீ போய் உன் வேலையை முடிச்சுட்டு படுமா… ஒரு முக்கியமான ஃப்ரெண்டுக்கு கால் பண்ணப் போறேன்மா…பீளீஸ்”
“இடுப்பொடிய இங்க உனக்காக சோத்தையும், கொழம்பையும் ஆக்கி வெச்சிருக்கேன்… துரை… வெளியில முழுங்கிட்டு வந்துட்டாரு” மல்லிகா கோபத்துடன் பொரிந்தாள். மல்லிகா, அப்பளத்தை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு மூடி, பண்ணிய வத்தல் குழம்பை எடுத்து ரெபிரிஜிரேட்டரில் வைத்தாள். காஸை துடைத்து, சமயலறையை மூடி விளக்கையணைத்தாள்.
“மல்லிகா, நீ வந்து படுடி…காலையில வெச்சுக்கறேன் அவனை” கேட்டுக் கொண்டிருந்த நடராஜன் தன் படுக்கையறையிலிருந்து குரல் கொடுத்தார்.”
“ஆமாம், இவரு வெச்சுப்பாரு காலையில, நான் என்ன பொம்பளையா என்ன வெச்சுக்கறதுக்கு, அவன் அவன் படற வேதனை அவனுக்குத்தான் தெரியும்” தனக்குள்ளேயே முனகியவன், பாத்ரூமுக்குள் நுழைய, அவன் மொபைல் சிணுங்க அவன் ஓடி வந்து எடுப்பதற்குள் மௌனமாகிய செல் மீண்டும் ஒலிக்க அது சுகன்யாதான்!.
“சொல்லுங்க செல்வா, நாலஞ்சு தடவை கால் பண்ணிட்டீங்க, என்ன விஷயம், நான் வாஷ்ரூமில இருந்தேன்…”

“ஒன்னுமில்லே, மனசே சரியில்லை சுகன்யா”
“என்னாச்சு சித்த நேரம் முன்ன என்னை ஸ்டேஷன்ல்ல விட்டப்ப கூட நல்லாத்தானே இருந்தீங்க” அவள் மனம் குதுகலித்தது, பையன் நம்ம லைன்ல வந்துட்டான்.
“இல்ல சுகன்யா; சாரி சுகன்யா, தப்பு செஞ்சுட்டேன், உங்களை நான் ஸ்டேஷன்ல விட்டிருக்ககூடாது, நீங்க வீட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம போனீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான், வீட்டுகிட்ட உங்களை ட்ராப் பண்ணியிருக்கணும்,

“இது அப்பவே உங்களுக்கு தோன்றியிருக்கணும், இப்ப கூட இது உங்களுக்கே மனசுல பட்டுதா…இல்ல”, சுகன்யாவுக்கு அவனை சீண்ட வேண்டும் போல இருந்தது, அவள் இழுத்தாள்.
“என் ஃப்ரெண்ட் சீனுதான் சொன்னான்”,சொன்னபின் தன் நாக்கை கடித்துக்கொண்டான், நான் என்ன உளற ஆரம்பிச்சுட்டேன், என்னை லூஸுன்னு நினைச்சுக்குவாளா?”
“போச்சு, இந்த அரை மணி நேரத்துக்குள்ள, ஊரு பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டியாச்சா, நான் உங்ககூட வந்தேன்னு, ஆமாம், அது யாரு உங்களுக்கு மேனர்ஸ் பத்தியெல்லாம் கிளாஸ் எடுக்கற வாத்தியார்?”
“என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ப்பா, ரொம்ப நல்லவன், சின்ன வயசுலருந்தே தோஸ்த்”,
“யாரு சினிமால வர சந்தானம் மாதிரியா… இல்ல…”, அவள் சிரித்தாள் அவளால் ரொம்ப நேரம் சீரியஸாக தன்னை காட்டிக்கொள்ள முடியவில்லை.
“ரொம்ப தேங்ஸ், சுகன்யா, நீங்க கோபமா இருப்பீங்கன்னு நினைச்சேன், நல்ல வேளை அப்படில்லாம் ஒன்னுமில்லை”, அவனும் சிரித்தான்.
“அப்புறம்”
“சுகன்யா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்பா”
“என்னது சொல்லுங்க…”