கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

அவன் தனியாக இருக்கும் போதும், கூட்டத்திலும், அவனுடய நடவடிக்கைள் எப்படி இருக்கும் என்று அவள் போதுமான அளவுக்கு அறிந்திருந்தாள். இன்று செல்வாவின் நடையையும், பாவனையும், அவன் தோரணையையும், அவன் மனதில் ஓடும் எண்ணங்களையும், சுகன்யா ஓரளவிற்கு புரிந்து கொண்டவளாக, தன் இதழ் ஓரத்தில் மெல்லிய புன்னகை தவழ அவனுடன் நடந்து கொண்டிருந்தாள். ஓரு விதத்தில் அவள் அவனின் சின்னப்பிள்ளைத் தனமான விளையாட்டை ரசிக்கவும் செய்தாள். சுகன்யா கோவிலினுள் பேசவில்லை. அவள் முகத்தில் சாந்தமும், அமைதியும் தவழ்ந்து கொண்டிருந்தது. நிதானமாக ஒவ்வொரு சன்னதியாக தரிசனம் செய்து கொண்டு வந்தவள் தாயாரின் சன்னதியில் வந்த போது, மனதைத் தளர்த்தி, கவனத்தை தன் புருவ மத்தியில் கொண்டு வந்து மூன்று நிமிடம் மாறா நிலையில் நிறுத்தினாள். செய்வதும், என்னை செய்ய வைப்பதும் நீயே. நான் உன் கையில் ஒரு கருவி. என் மனதில் கபடம் எதுவும் இல்லை. என் மனம் இவனை நாடுகிறது. உண்மையிலேயே நான் இவனால் வசீகரிக்கப்படுகிறேன். அம்மா, நான் செய்வது, சரியா, தவறா என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. மனமார தாயாரை வணங்கி வேண்டினாள், தாயே நீ தான் எனக்கு வழி காட்டவேண்டும்.
“செல்வா, போகலாமா” பக்கத்தில் நின்றவனை அன்போடு பார்த்தாள்.
“சுகன்யா, நீங்க அம்பாளிடம் என்ன கேட்டீங்க…கண்ணை மூடிக்கிட்டு அப்படியே மெய் மறந்து நின்னீங்க” செல்வா அவளை வியப்புடன் பார்த்தான்.
“சொல்றேன் வாங்க…நீங்க கொஞ்சம் பரபரப்பா இருந்த மாதிரி இருந்தது. உங்களுக்கு வேற வேலை ஏதும் இருக்கா…அப்படி ஒன்னும் இல்லையே? நீங்க என்ன வேண்டிக்கீட்டீங்க?” சுகன்யாவின் முகத்தில் கேள்வி தொக்கியிருந்தது.
“எனக்கு ஒன்னும் வேலை இல்லை சுகன்யா, இன்னைக்கு அடியேன் உங்களுடைய சேவையில்தான்…உங்க அளவுக்கு என் மனம் கோவில்ல ஒட்டல…அது என்னமோ உண்மைதான்.” சுகன்யாவின் முந்தானை காற்றில் பறந்து ஒரு வினாடி அவளின் ஒரு பக்க முன்னழகை கோடிட்டுக்காட்டியது. அந்த வனப்பை அவனால் அவ்வளவு நெருக்கத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. குப்பென்று ரத்தம் அவன் தலைக்கேறி முகம் சிவந்தது. செல்வா சட்டென்று தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சூரியன் அஸ்தமித்த நேரம். வேலி இல்லாத காற்றில் வந்த லேசான குளிர்ச்சி, மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருந்தது. கன்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர், எண்ணில் அடங்காத, பிறந்து, உயரத்தில் வளர்ந்து, கரையை நோக்கி சீற்றத்துடன் வெகு வேகமாக வந்து, பின் அளவில் சிறுத்து, நிற்பவர்களின் கால்களில் தவழ்ந்து, திரும்பிய அந்த அலைகள் எழுப்பிய ஓசையை காது கொடுத்து வாங்கிக் கொண்ட அவள், பிரமிப்புடன் ஒரு குழந்தையை போல், வைத்த கண் வாங்காமல் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கடற்கரை காற்றில் அவள் கூந்தலின் சுருள் சுருளான முடிக்கற்றைகள் நெற்றியில் விழுந்து, பறந்து அலைப்பாய்ந்து கொண்டிருந்தது. செல்வா, சுகன்யாவின் முகத்தை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.