ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

என்னைப் பார்த்தாய்.
”என்னங்க..?”
” ஏதாவது தேவைப் பட்டுச்சுன்னா.. என்னைக் கேளு..!”
”செரிங்க..”
”அப்பறம்….”
“ம்ம்?”
” உனக்குன்னு ஒருத்தன் எங்கயாவது பொறந்திருப்பான். அப்படி ஒருத்தன் வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இருந்தா.. என்கிட்ட சொல்லு. நானே.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்..!!”
மெல்ல..” நா.. அதெல்லாம் பண்ணிக்க மாட்டங்க…” என்றாய்.
”ஏன் தாமரை…?”
”இஷ்டமில்லீங்க…” என ரோட்டைப் பார்த்தவாறு சொன்னாய்.
”அப்ப.. தொழில கன்டினியூ பண்ணப்போறியா..?”
சடக்கெனத் திரும்பினாய். உன் கண்களில் ஒரு வலி..! உனது இதயத்தின் அதிர்வை… துடிக்கும் உன் உதடுகள் சொன்னது..!!
”சாகறவரை… மாட்டங்க..!!” என்று திடமாகச் சொன்னாய்.
”நம்பலாமில்ல…?”
”சத்தியமாங்க…”
” நீ மாறினா.. அது நெஜமாவே.எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம்தான்..!! உனக்கு என்ன உதவி வேனும்னாலும் என்கிட்ட கேளு..!! என்னால ஆன எல்லாம் நான் செய்வேன்…!!”
கண்கள் கலங்க… ”என் தெய்வங்க.. நீங்க..!!” என்றாய்.
”ம்கூம்.. நீ மாறமாட்ட..” என்று சிரித்தேன்.
”நம்புங்க..!! சத்தியமா மாறிருவங்க…!!”
” அட… நா.. அதச் சொல்லல..!! நீ பேசற இந்த ஸ்டைல் மாறவே மாறாதுனு சொன்னேன்..!!” என்றேன்.

1 Comment

Comments are closed.