ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

புன்னகையுடன் காரைக் கிளப்பினேன். புழுதி பறந்தது..!! உன்னைப் பார்த்து.. மெல்லிய புன்னகையுடன் கேட்டேன்.
”எல்லாரும் உன்னப் பாத்து.. ஆச்சரியப்படறாங்க போலருக்கு..?”
” ஆமாங்க..” என்றாய். முகத்தில் மகிழ்ச்சி பரவ..!
” ம்.. இப்ப நீ.. பெரியாளாகிட்ட..”
”ஐயோ…! அப்படி இல்லீங்க..!!”
பத்ரகாளி அம்மன் கோவில் முன்பாகக் காரை நிறுத்தினேன்.
”சாமி கும்பிடறியா.. தாமரை..?”
”ஆமாங்க..! நீங்க…?” என்று என்னைப் பார்த்தாய்.
” நீ போய் கும்பிட்டு வா..”
”ஏங்க…?”
”எனக்கு பழக்கமில்ல…”
சிரித்து விட்டு.. காரைவிட்டு இறங்கிப் போனாய். நான் காரிலேயே உட்கார்ந்து விட்டேன்.! காலை நேரம் என்பதால் கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.! கோவில் கடைகளிலிருந்து பக்தி பாடல் இறைந்து பாடிக்கொண்டிருந்தது..!
கோவில் என்பது அமைதியாக இருக்க வேண்டிய இடம்.. இப்படி சந்தை மடம் போல் இறைச்சலாக இருப்பது.. மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது..!!
நான் காரில் உட்கார்ந்தபடியே… பக்காசூரன் சிலையை வேடிக்கை பார்த்தேன்..! சிலை முன்பாக.. ஒரு ஏழெட்டு.. ஆட்டுக்கிடாய்கள்… வெட்டப் படுவதற்குத் தயாராக..நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..!!
கொடுவாலும் கையுமாக… ‘வெட்டாள் ‘ நின்றிருக்க… ‘துலுக்கு ‘ கேட்பவர்கள்… இடுப்பில் துண்டு கட்டி.. பயபக்கதியுடன் நின்றிருந்தனர்..! ஆடுகள் தலையை மட்டும் ஆட்டினால் போதும்… அடுத்த நொடி… அதன் தலை… உடலைவிட்டு விலகிப் போய்விடும்…!!
நீ வந்தாய்..! உன் நெற்றியில் விபூதி.. குங்குமம்..! உதட்டில் மலர்ச்சியான சிரிப்பு..! முகம் நிறைய மகிழ்ச்சி..!!
நான் கதவைத் திறந்து விட.. காருக்குள் உட்கார்ந்து… என் முன்பாக உன் வலது கையை நீட்டினாய்.! உள்ளங்கை மலர்த்தி..
”வெச்சுக்குங்க..” என்றாய்.
”பரவால்ல… வேண்டாம்..” என்றேன்.
உன் முகம் சுணங்கியது.
”ஏங்க..?”
”சரி… உனக்காக..!!” என வலது கை மோதிர விரலால் தொட்டு.. என் நெற்றியில் இட்டுக் கொண்டேன்..!
மீதமிருந்ததை.. ஒரு காகிதத்தில் மடித்து… காரில் வைத்தாய்..!
”கெளம்பலாமா..?” நான் கேட்டேன்.

1 Comment

Comments are closed.