ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

”வெள்ளரி திண்ணு.. ரொம்ப நாளாச்சு…!! இப்ப சாப்பிடனும் போலருக்கு..!” என்றேன்.
” இருங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்..” என்றாய்.
பணத்தை எடுத்து உன்னிடம் கொடுத்தேன்.
”ஐயோ… வேண்டாம்.. வெய்ங்க…!!” என்று சிரித்தாய்.
”உன்கிட்ட இருக்கா..?”
”எல்லாம் தெரிஞ்சவங்கதாங்க… காசு வேண்டாம்.. வெய்ங்க..!!” என்றுவிட்டு… நீ காரை விட்டு இறங்கிப் போய்.. நிறையவே.. வாங்கி வந்தாய்..!!
காரில் உட்கார்ந்து..
”போலாங்க…” என்றாய்.
நான் காரை உசுப்ப.. நிலாவினியின் வாடா மல்லி.. சுடிதார் ரியர்வு மிரரில் தெரிந்தது. நான் வெளியே தலைநீட்டி… பின்னால் பார்க்க.. அவளது பின் பக்கம்தான் எனக்கு தெரிந்தது.
யாரோ ஒருவனுடன் பைக்கில் போய்க் கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா என்னைப் பார்த்து டாட்டா காட்டியது..!!
‘ யானைகள் சிறப்பு நலவாழ்வு’
முகாமுக்குள்.. கெடாவெட்டு.. விருந்துக்கான சமையல் நடந்து கொண்டிருந்தது..!! ஆண்கள்… பெண்கள்… குழந்தைகள்… குட்டிகள்.. என்று நிறையப் பேர் இருந்தனர்..!! ரோட்டின் முன்பாக இரண்டு கார்களும்… சில பைக்குகளும் நின்றிருந்தன..!!
”ஆளுகள்ளாம்.. இருக்காங்க போலருக்கு..?” என்றேன்.
”ஆமாங்க..” என்று சிரித்தாய்.
”நம்ம எடத்துல எப்படினு தெரியலியே..?”
”அங்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க..” என்றாய்.
புளிய மரத்தடியில் எந்த வாகனமும் இல்லை. நான் அந்த மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு இறங்கி… ரோட்டின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு… கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தேன். கொட்டாவி வந்தது..!
நீயும் என் பக்கத்தில் வந்து நின்றாய்..! ஆற்றின் சலசலப்பு ஒரு இனிமையான சங்கீதம். மரத்தில் அணில்கள் ஓடின… பறவைகள் பாடின..!!
”இங்க யாரும் இல்லீங்க..” என்றாய்.
”ம்..ம்..” புன்னகைத்தேன்.
”ஆத்துக்கு போலாங்களா..?”
”ம்..ம்.. போலாம்..!!”
சுற்றுப் புரத்தில் எங்கும் ஆளரவமே இல்லை. கை கோர்த்துக் கொண்டு ஆற்றுச் சரிவில் இறங்கினோம்..!!

காலை நேர இளங்காற்று.. சிலுசிலுவென இதமாக வீசிக் கொண்டிருந்தது. ஆற்று நீரில் குளித்து வந்த .. இளந் தென்றலின் இதமான வருடலில் என் மேனி சிலிர்த்தது..! உடலின் சிலிர்ப்பில் உள்ளமும் குதூகலமானது. !
ஆற்றில் இன்னும் தண்ணீர் திறந்து விடப் பட்டிருக்கவில்லை.. அளவான தண்ணீர்.. சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.!! காரையோரமாகப் போய்..ஒரு பாறை மேல் ஏறி நின்று… ஆற்றின் கீழ் பகுதியைப் பார்த்தேன்..! ஆண்களும்… பெண்களுமாகச் சிலர்… நீரில் விளையாடிக்கொண்டிருந்தனர்..!!
என் பேண்ட்டை முழங்கால்வரை சுருட்டி விட்டுக் கொண்டு… அந்தப் பாறைமீது உட்கார்ந்து.. கால்களை தண்ணீரிருக்குள் தொங்கப் போட்டுக்கொண்டேன்..!! எதிர்க் கரையில் தெரியும் பாக்குத் தோப்புக்களும்… நீலமலையும் ரம்மியமாகத் தெரிந்தது..!!

1 Comment

Comments are closed.