ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

”கேள்விப்பட்டேன்..!! ”
”வீட்ல சொல்றாங்க.. பட்.. நா இன்னும் டிசைட் பண்ணல..!!”
”சரி… கோவிலுக்கு.. யாராரு வந்தீங்க..?”
” என் பிரெண்டுக்கு பர்த்டே.. கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்டா..! வந்தேன்..!! நீங்க எப்பருந்து சாமியெல்லாம்..?”
”இல்ல.. இல்ல…! நா.. வந்து.. சும்மா…!”
”நெத்தில…திண்ணீரு…?”
” அ… அது… இந்தப் பொண்ணு.. குடுத்துச்சு… அதான்…” நான் தடுமாறினேன்.
”ம்..ம்..! எதிர் பாக்கலாம்..!!” என்றாள்.
அவளின் கோவைக் கனி இதழ்களும்… கொஞ்சும் விழிப்பார்வையும்… என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தன..!! அவளிடம் சிக்கிக்கொண்டு தவிப்பது கஷ்டமாக இருந்தது. இப்போது அவளிடமிருந்து தப்பிப்பதே… இப்போதைக்கு நல்லது..!!
சட்டேன.. ”சரி.. நிலா.. அப்ப நான் கெளம்பட்டுமா..?” என்றேன்.
”வொய் நாட்..?” கண் சிமிட்டினாள்.
”ஓகே.. பை..!” காரை நகர்த்தினேன்.
”பை.. பை..!!” என அர்த்த புஷ்டியுடன் கையசைத்து டாட்டா காண்பித்தாள்.
‘உப் ‘ பென்று பெருமூச்சு விட்டு.. என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காரைச் சிறிது தூரம் நகர்த்திய பின் நீ கேட்டாய்.
”யாருங்க.. அது..?”
”என் பிரெண்டு ஒருத்தன் குணா..! இது அவனோட தங்கச்சி..!! சரி.. இப்ப எங்க போலாம். ?”
”நீங்க சொல்லுங்க…?”
”அங்க போலாமா..?”
”எங்கீங்க…?”
”யானைகள் முகாம் நடக்குமே… புளிய மரத்துக்கிட்ட..?”
”ம்… போலாங்க..”
கோவில் மதில் சுவருக்கு வெளியே.. உப்பு.. மிளகாய்பொடி தூவப்பட்ட… வெள்ளரி.. கொய்யா… மாம்பிஞ்சு.. எல்லாம் ஒரு வண்டியில் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் என் நாக்கில் எச்சில் ஊறியது..!!
அதன் பக்கத்தில் காரை நிறுத்தினேன்.
”ஏங்க..?” என்று.. என்னைப் பார்த்தாய்.

1 Comment

Comments are closed.