ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

”ம்.. போலாங்க..”
நான் காரை உசுப்ப… சட்டென என் பக்கத்தில் வந்து…
”ஹல்லோ…!!” என ஆஜரானாள் நிலாவினி..!!
நான் மெலிதாக அதிர்ந்தேன். உடனே சுதாரித்து…
”ஹேய்.. நிலா..!!” என்றேன்.
வெளியே தலைநீட்டி..
”என்ன இங்க..?” எனக்கேட்டேன்.
”கோயிலுக்குத்தான்..” என்று பற்கள் பளீரிடச் சிரித்தவள்.. காருக்குள் இருந்த.. உன்னைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.
”சாமி தரிசனம் முடிஞ்சுதா..?” நிலாவினியின் கவனத்தைக் கலைக்க விரும்பினேன்.
” ஒ..யெஸ்..!!” என்று சிரித்து ”நீங்ககூட.. சாமியெல்லாம் கும்பிடுவீங்க போல..?” என பொடி வைத்துக் கேட்டாள் நிலாவினி.. !!

நிலாவினி…!! இளமையின் வனப்பைச் சொல்லும் ஒரு எழில் மங்கை..! பருவத்தில் பூத்த… ஒரு வசந்த கால மலர்..! பல இளைஞர்களின் கனவுகளில் ஆட்சி செய்யும்.. ஒரு கனவு ராணி..!! இப்படி எவ்வளவோ வர்ணிக்கலாம்..! அத்தனைக்கும் தகுதியுள்ள ஒரு இளம்பெண் அவள்..! என் நெருங்கிய நண்பன் குணாவின் தங்கை..!!
”என்னது.. அதிசயமா கோவில் பக்கம்லாம்..?” என்று அர்த்த புஷ்டியுடன் கேட்டாள் நிலாவினி.
”இ… இல்ல.. வந்து..நிலா.. இது..தாமரை…!!” என்றேன்.
”தாமரை…??” கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தாள்.
”தெரிஞ்ச பொண்ணு…”
”ஓ.. அப்படியா..?” என்று உன்னைப் பார்த்து.. ”ஹலோ.. நான் நிலா..!!” என்றாள்.
நீ சிரித்தாய். பேசவில்லை.
நான் ”ஆமா.. நீ எப்ப வந்த..?” என்று நிலாவினியிடம் கேட்டேன்.
” நேத்துதான் வந்தேன்..!”
” இனிமே.. இங்கயேதானா..?”
” யாரு சொன்னது..?”

1 Comment

Comments are closed.