“ஏன் கேக்குறீங்க..??”
“சொல்லேன்.. ப்ளீஸ்..!!”
“நான் பொறந்து வளர்ந்த வீடு.. என் அம்மா வாழ்ந்த வீடு.. பிடிக்குமான்னு கேட்டா என்ன அர்த்தம்..??”
“ஹ்ம்ம்..!! என்ன ப்ளான் வச்சிருக்குற..??”
“புரியல..!!”
“இல்ல.. வீட்டை காலி பண்ணினப்புறம்.. எங்க போற மாதிரி ப்ளான் வச்சிருக்குற..??”
“ஹ்ஹ.. அதைப்பத்திலாம் உங்களுக்கு என்ன அக்கறை..??”
“ஏன்.. எனக்கு அக்கறை இருக்க கூடாதா..??”
“ம்ம்.. உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்..!!”
“கேட்டதுக்கு பதில் சொல்லு..!!”
“இப்போதைக்கு எந்த ப்ளானும் இல்ல..!!”
“ஹ்ம்ம்..!! இந்த வீட்டை விட்டு போறது.. உனக்கு கஷ்டமா இல்லையா..??”
“கஷ்டமாத்தான் இருக்குது.. என்ன பண்றது..??”
“நான் வேணா ஒரு யோசனை சொல்லட்டுமா..??”
“என்ன..??” மீரா கேட்டுக்கொண்டிருந்தபோதே,
“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…” என்று அழைப்புமணி மீண்டும் அலறியது.
அழைப்புமணி ஓசை கேட்டு.. மனோகர் சுருங்கிய புருவத்துடன் கதவை திரும்பி பார்க்க.. மீரா மிரட்சியான விழிகளுடன் அதே கதவை வெறித்தாள்..!! ஓரிரு வினாடிகள் தயங்கிய மனோகர்.. பிறகு கதவை நோக்கி நடந்தான்..!! அசோக்தான் வந்திருகிறான் என்பதை அனுமானித்திருந்த மீரா.. ‘இப்போது என்ன செய்வது’ என்று ஒருகணம் திகைத்தாள்..!! அப்புறம் அவசரமாய் யோசித்து.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. கதவை நோக்கி ஓடினாள்..!!
கதவை திறக்கும் குமிழின் மீது மனோகர் கைவைக்க.. அடுத்தநொடியே அவனுடைய கையை மீராவின் கை வந்து பற்றி.. திறக்கவிடாமல் தடுத்தது..!! மீராவுடைய முகத்தை ஏறிட்ட மனோகர்.. நெற்றியை சுருக்கி, ‘என்ன..?’ என்பது மாதிரி கேள்வியாக பார்த்தான்..!! மீரா உதட்டின் மீது கைவைத்து.. ‘பேசாதீங்க’ என்பது மாதிரி சைகை செய்தாள்.. பிறகு.. பற்றிய கையை பிடித்து இழுத்து.. மனோகரை அடுத்த அறைக்கு அழைத்து சென்றாள்..!!
“ஹேய்.. என்னாச்சு..??”
“வாங்க.. சொல்றேன்..!!”
அடுத்த அறைக்குள் நுழைந்ததும்.. அங்கிருந்தே வாசற்கதவை ஒருமுறை எட்டிப்பார்த்துக்கொண்ட மீரா.. அப்புறம்.. தன்னையே குழப்பமாக பார்த்துக்கொண்டிருந்த மனோகரிடம் திரும்பி.. கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்..!!
“இங்க பாருங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! வெளில ரெண்டு பேர் வந்திருக்காங்க..”
“யா..யார் அவங்க..?? எதுக்கு வந்திருக்காங்க..??”
“ஹையோ.. என்னை கொஞ்சம் பேச விடுங்க..!!”
“சரி சொல்லு..!!”
“என்னைத்தான் தேடி வந்திருக்காங்க.. அவங்களுக்கு என் பேர் தெரியாது.. மீரான்னு சொல்வாங்க.. ஆனா.. அவங்க தேடி வந்திருக்குறது என்னைத்தான்..!! என்னைப் பத்தி விசாரிப்பாங்க.. ஐ மீன்.. என்னோட அடையாளம்லாம் சொல்லி விசாரிப்பாங்க.. அந்த மாதிரி ஒரு பொண்ணு இந்த வீட்டுல இருக்காளான்னு கேட்பாங்க..!! தயவுசெஞ்சு அவங்கட்ட.. ‘அந்த மாதிரி யாரும் இங்க இல்ல’ன்னு சொல்லிடுங்க.. ப்ளீஸ்..!! சொல்லிடுறீங்களா.. ம்ம்..??”
“எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”
“உங்களுக்கு ஒன்னும் புரியவேணாம்.. ஜஸ்ட்.. நான் சொன்னதை மட்டும் செய்ங்க போதும்.. ப்ளீஸ்..!!”
“ம்ம்..!!”
“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…”
மறுபடியும் அழைப்புமணி சப்தம் எழுப்பி.. அவர்களை அவசரப்படுத்தியது..!! ஓரிரு வினாடிகள் குழப்பமாகவும், அவஸ்தையாகவும் பார்த்துக்கொண்டிருந்த மனோகர்.. அப்புறம் ஒரு பெருமூச்சுடன் திரும்பி.. ஹாலுக்கு நடந்தான்..!! மீரா அந்த அறைக்குள்ளேயே.. சுவற்றுடன் சேர்ந்து ஒன்றிக்கொண்டாள்.. அடுத்த அறையில் நடக்கப்போகிற சம்பாஷணைகளை கேட்பதற்காக.. காதுகளை இப்போதே கூர் தீட்டிக்கொண்டாள்..!!