எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

“நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..!!” – எகத்தாளமாக சொன்னான் அவன்.

“நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க..!!” – ஒரு குழந்தையின் புன்னகையுடன் சொன்னான் அசோக்.

“உன் அம்மாவை உனக்கு பிடிக்குமா..??” – மீரா அசோக்கிடம் கேட்டாள்.

“பிடிக்கு…மாவா..?? ஹ்ஹ.. உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஜீவன்.. என் அம்மாதான்..!! உனக்கு..??” – அசோக் திரும்ப கேட்டான்.

“ம்ம்.. எனக்கும் என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்..!!” – இறந்து போன அம்மாவை நினைத்தவாறே பதில் சொன்னாள்.

தியானத்துக்கு அடங்க மறுத்த மீராவின் மனது.. இப்போது தனது உச்சபட்ச அட்டகாசத்தை தொடங்கியிருந்தது..!! பலவித குழப்பமான எண்ணங்கள்.. குறுக்கும் மறுக்குமாக அவளது மூளைக்குள் ஓட.. அவளால் நிம்மதியாக யோகாவை தொடர முடியவில்லை..!! தலை விண்விண்ணென்று தெறிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பிக்க.. அவளது முகம் அவஸ்தையில் துடித்தது..!! இமைகளை இறுக்கி கண்களை சுருக்கிக்கொண்டாள்..!! உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்கமுடியாமல் பற்களை கடிக்க.. அவளது உதடுகள் படபடவென துடிக்க ஆரம்பித்தன..!!

“அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!” – நீலப்ரபா மீண்டும் மனதுக்குள் வந்து நின்றாள். அவளது மார்பில் கிடந்த அம்மா திடீரென அசோக்காக மாறி..

“எ..எனக்கு நீ வேணும் மீரா..!!” என்றான் உலர்ந்த குரலில்.

“இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!” – மீரா அலறினாள்.

“இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!” – போதையில் செருகிய விழிகளுடன் மீரா சொல்ல,

“சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??” – அசோக் அவளை அணைத்துக்கொண்டான்.

“ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!” – உயிரற்ற அம்மாவிடம் மீரா கெஞ்சினாள்.

“போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??” – ஐந்து வயது மீரா மீண்டும் கெஞ்சினாள்.

“போயிடாத மீரா.. போயிடாத..!!” – மடியில் கிடந்த அசோக் மயங்கிப்போகும்முன் மீராவை கெஞ்சினான்.

அவ்வளவுதான்..!! மீராவால் அதற்குமேலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை..!! மார்புகள் குபுக் குபுக்கென ஏறி இறங்க.. நுரையீரல் சர் சர்ரென காற்றை விழுங்கி வெளியேற்ற.. படக்கென விழிகளை திறந்தாள்.. திறந்ததுமே முணுக்கென்று கண்ணீர் துளிகள் இரண்டு விழிகளிலும் வெளிப்பட்டு கன்னம் நனைத்து ஓடின..!! உள்ளத்தில் எழுந்திட்ட குமுறலை ஒரு சில வினாடிகள் அடக்க முயன்றவள்.. பிறகு அந்த முயற்சியில் தோற்றுப்போனாள்..!! விசும்பலாக ஆரம்பித்து.. அப்புறம் உடைந்து போய் ‘ஓஓஓ..’வென அழ ஆரம்பித்தாள்..!! அப்படியே நிலைகுலைந்து போய் தரையில் சரிந்தாள்..!!

பட்டுப்போன்ற மிருதுவான அவளது கன்னங்களில் ஒன்று தரையோடு அழுந்தி கிடக்க.. இரண்டு விழிகளும் இப்போது கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து ஓட ஆரம்பிக்க.. அவளுடைய உதடுகள் மட்டும் மெலிதாக முணுமுணுத்தன..!!

“ஸாரிடா அசோக்.. ஸாரிடா..!!”

எவ்வளவு நேரம் அவ்வாறு அழுதுகொண்டே கிடந்தாளோ..!! தனது கண்ணீரால்.. தான் ஏற்படுத்திய குளத்திலேயே.. தனது கன்னம் அமிழ்ந்துபோய்.. அசையாமல் நெடுநேரம் கிடந்தாள்..!! ஜன்னல் வழியாக அறைக்குள் பாய்ந்த சூரிய கதிர்கள்.. அவளது முகத்தை சுட்டு உஷ்ணமாக்கியதை கூட கண்டுகொள்ளவில்லை அவள்..!!