எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

அவ்வளவுதான்..!! மீராவுக்கு அந்த கணத்தில் மனதில் எழுந்த உணர்வுகளை, வார்த்தையில் சொல்வது கடினம்..!! உள்ளுக்குள் கோபம் பீறிட்டு கிளம்ப.. அதை கட்டுப்படுத்திக்கொள்வதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டுப் போனாள்..!! உள்ளத்தில் பொங்கிய ஆத்திரத்தை எல்லாம்.. உக்கிரமாக கண்களில் தேக்கி.. உஷ்ணமான ஒரு பார்வை பார்த்தாள்..!!

‘இதோ.. இன்னொரு அரவம்..!! அம்மா அடிக்கடி சொல்வாளே.. அந்த நச்சுப் பிராணிகளில் அடுத்தொன்று..!!’

மனோகரோ அவளுடைய அனல் கக்கும் பார்வையை கவனத்தில் கொள்ளாமல்.. அவன் பாட்டுக்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..!!

“கோவப்படாம கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு.. இது எவ்வளவு நல்ல டீல்னு உனக்கே புரியும்..!! எப்படியும்.. உன்னை பத்தி தெரிஞ்ச யாரும், உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்ல.. அப்படியே பண்ணிக்கிட்டாலும்.. அது என்னைக்கா இருந்தாலும் உனக்கு பிரச்சனைதான்..!! உன் பேக்ரவுண்ட் அப்படி..!! அப்படி யாரையுமே கல்யாணம் பண்ணிக்காம.. கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நிம்மதி இல்லாம.. சொந்த பந்தம் இல்லாம.. சொத்து பத்து இல்லாம.. வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படுறதுக்கு பதிலா.. இந்த யோசனைக்கு நீ ஓகே சொன்னேன்னு வச்சுக்கோ.. உனக்கு ஒரு வசதியான வாழ்க்கையை அமைச்சு தர நான் ரெடியா இருக்கேன்..!! என்ன சொல்ற..??”

“……………………….” – மீரா இன்னுமே அவனை எரித்துவிடுவது போல முறைத்துக்கொண்டுதான் இருந்தாள்.

“ஹ்ஹ.. புவனாவுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாளோன்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்.. அவளை நான் சமாளிச்சுக்குறேன்.. அது என் பொறுப்பு.. ஓகேவா..??”

“……………………….”

“இங்க பாரு.. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.. அப்புறம் எல்லாம் சரியாயிடும்.. எல்லாத்துக்கும் நம்ம மனசுதான் காரணம்..!! நீ மனசு வச்சா மகாராணி மாதிரி வாழலாம்.. உன்னால முடியும்.. சின்ன வயசுல இருந்தே உன் அம்மாவ பார்த்து வளர்ந்திருக்குற.. I think.. you can do this better than anybody else..!!” சொல்லிக்கொண்டே மனோகர் மீராவின் தோள் மீது கைவைத்தான்.

“கையை எடுறா..!!” மீரா இன்னுமே ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சாந்தமாகத்தான் சொன்னாள்.

“ஹேய்.. நான் என்ன சொல்ல வரேன்னு..”

“அடச்சீய்.. கையை எடுறா.. பொறுக்கி..!!”

பெருங்குரலில் கத்திய மீரா மனோகரின் கையை வெடுக்கென தட்டிவிட்டாள். அவனுக்கு இப்போது பொசுக்கென்று கோவம் வந்தது.

“ஏய்.. என்ன.. ரொம்பதான் துள்ற..?? அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்..?? அதுவும் உன்கிட்ட அப்படி கேட்டதுல என்ன தப்பு..?? எப்படிப்பட்ட அம்மாவுக்கு மகளா பொறந்தோம்னு மறந்து போச்சா..??”

“என் அம்மாவை பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்லடா.. எச்சக்கல நாயே..!! வீட்டை விட்டு வெளில போ..!!”