எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

“……………………..”

“ஹ்ம்ம்… பெட்ரூம்க்குள்ள வந்ததுக்குலாம் அப்படி டென்ஷன் ஆகுற..?? அப்படி என்ன பெட்ரூம்ல சீக்ரட் வச்சிருக்குற..?? ம்ம்..??”

சொல்லிக்கொண்டே மனோகர் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க.. அவனது கண்களில் அந்த ஃபோட்டோ ஃப்ரேம் தென்பட்டது..!! அசோக்கும், மீராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோ.. ஐந்து நாட்களுக்கு முன்பாக, அந்த ஃபுட்கோர்ட்டில், அசோக்கின் கன்னத்தோடு கன்னம் பதித்து, மீரா எடுத்துக்கொண்ட அந்த ஃபோட்டோ..!! சோகத்தை மறைத்தவாறு மீரா சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவளுடைய ஸ்பரிசத்தில் விழைந்த சந்தோஷத்தை மறைத்தவாறு அசோக் முறைத்துக் கொண்டிருந்தான்..!!

“ஹேய்.. இது.. இப்போ வந்துட்டுப் போனானே.. அந்தப்பையன்தான..??” மனோகர் ஆர்வமாக கேட்டவாறே அந்த ஃபோட்டோ ஃப்ரேமை கையில் எடுத்தான்..!!

“ஆமாம்..!!” அவசரமாக அவனை நெருங்கிய மீரா, வெடுக்கென அதை பறித்து அதனிடத்தில் வைத்தாள்.

“யார் அவன்..??”

“தேட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்..!!”

“ஹ்ம்ம்.. வீட்டை காலி பண்ணிட்டு எங்க போறதுன்னு எதுவும் ப்ளான் இல்லைன்னு சொன்ன..?? பாத்தா அப்படி தெரியலையே.. ஏதோ பக்கா ப்ளான் போட்ருக்க போல இருக்கே..?? அவனும் ஆளை பாத்தா சரியான ஏமாளி மாதிரி இருக்கான்..??” மனோகரின் குரலில் இருந்த கேலி, மீராவுக்கு எரிச்சல் மூட்டியது.

“இங்க பாருங்க.. வாய்க்கு வந்தபடி பேசாதீங்க..!! அவனைப்பத்தியும் உங்களுக்கு தெரியாது.. என்னை பத்தியும் உங்களுக்கு எதுவும் புரியாது..!! அவனை மாதிரி ஒரு நல்லவனை எங்கயும் பாக்க முடியாது.. என்னோட கடந்தகாலம் பத்தின எந்த அக்கறையும் இல்லாம.. எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்க அவன் ரெடியா இருக்கான்..!! தெரியுமா.?? நான்தான் என்னோட நெலமையை நெனச்சுக்கிட்டு.. எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன்..!! புரியுதா..??”

படபடவென பேசி முடித்த மீரா.. உடனே திரும்பி விடுவிடுவென நடந்து, அந்த அறையை விட்டு வெளியேறினாள்..!! அவளுக்கு தொண்டை வறண்டு போன மாதிரி இருந்தது.. தாகமெடுத்தது.. கிச்சனுக்குள் நுழைந்தவள், குழாய் திருகி.. ஒரு தம்ளரில் நீர் பிடித்து.. கடக் கடக்கென மொத்த நீரையும் தொண்டைக்குள் சரித்தாள்..!! அவளை பின்தொடர்ந்து வந்திருந்த மனோகர்.. அவள் நீரருந்தி முடிக்கும் வரையில் கைகளை கட்டிக்கொண்டு காத்திருந்தான்..!!

பிறகு அவள் நீரருந்தி முடித்ததும்.. தொண்டையை லேசாக செருமிக்கொண்டு.. மீராவை நோக்கி நடந்தவாறே.. குதர்க்கமான குரலில் சொன்னான்..!!

“அப்போ.. வீட்டை காலி பண்ணினப்புறம் அவன் கூட போறமாதிரி ப்ளான் எதுவும் இல்ல..??”

“இல்ல..!!”

“அப்படினா.. நான் அப்போ சொல்ல வந்ததை.. இப்போ சொல்லலாம்னு நெனைக்கிறேன்..!!”

“எ..எப்போ..??”

“கொஞ்ச நேரம் முன்னாடி..!! உனக்கு ஒரு யோசனை சொல்லவான்னு கேட்டேனே..??”

“ம்ம்.. ஆமாம்..!! என்ன யோசனை..??”

கண்களில் ஒருவித கேள்வியுடன் மீரா மனோகரை பார்த்தாள். அவன் இவளுடைய முகத்தையே ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்துவிட்டு, பிறகு சொன்னான்.

“உனக்கு விருப்பம் இருந்தா.. நீ இந்த வீட்லயே தங்கிக்கலாம்..!!”

“வாட்..?? எ..என்ன சொல்றீங்க நீங்க..??”

காதில் விழுந்த வார்த்தைகளை நம்பமுடியாமல்.. மீரா அவனை திகைப்பாக பார்த்தாள்..!! அவனோ உதட்டில் ஒருவித விஷமப்புன்னகையுடன்.. இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! பிறகு உதடுகளை மெல்ல பிரித்து.. மிக தாழ்வான குரலில் சொன்னான்..!!

“உன் அம்மா மாதிரி..!!”

அவன் அவ்வாறு சொன்னதுமே மீராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது அவளுக்கு புரிவது போல இருக்க.. அதற்குள்ளாகவே அவன்..

“நான் அப்பப்போ வந்து போயிட்டு இருக்கேன்.. உன் அப்பா மாதிரி..!!” என சொல்லிவிட்டு இளித்தான்.