எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!!

தூரத்தில் ஒரு காவல்த்துறை வாகனம்.. ஈச்சமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது..!! தெருவுக்குள் நுழைந்த அடுத்த நொடியே.. அந்த வாகனத்தை கவனித்துவிட்ட அசோக்.. அதை நோக்கித்தான் தனது வண்டியையும் செலுத்தினான்..!! அந்த வாகனத்துக்கு அருகாகவே.. தனது பைக்கையும் பார்க் செய்தான்..!! ஈச்சமரத்துக்கு எதிர்ப்புறம் இருந்த வீடு.. அடர்பச்சையும் இளமஞ்சளுமான வர்ணப்பூச்சோடு.. அழகோடும் கம்பீரத்தோடும் காட்சியளித்தது..!! அந்த வீட்டு கேட்டுக்கருகிலும்.. கிசுகிசுப்பு பேச்சுடன் ஒரு சிறு மனித கும்பல்..!! அசோக் அந்த வீட்டை நோக்கி நடந்தான்..!!

கும்பலோடு கும்பலாய் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்தார்கள்..!! தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களில்.. தனசேகரன் என்ற பெயர்ப்பட்டயத்தை மார்பில் தாங்கியிருந்த ஒரு கான்ஸ்டபிள்.. அசோக் அவர்களை நெருங்குவதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார்.. நெற்றியை சுருக்கியவர், அசோக்கை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தார்..!! அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அசோக்.. அவனாகவே..

“எஸ்பி ஸாரை பாக்கணும்..!!” என்றான்.

“நீ யாரு..??”

“என் பேரு அசோக்.. ஆர்காட் ரோட்ல அட்வர்டைஸ்மன்ட் ஏஜன்சி வச்சிருக்கேன்..!!”

“ஓ..!! என்ன விஷயமா அவரை பாக்கணும்..??” கேட்டுவிட்டு தனசேகரன் அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனிடம் இப்போது மெலிதான ஒரு தயக்கம்.

“அ..அது.. அது கொஞ்சம் பர்சனல் ஸார்..!!”

அசோக் சொன்ன பதிலில்.. அந்த தனசேகரன் சற்று எரிச்சல் ஆகி இருக்கவேண்டும்.. அது அவரது குரலிலேயே தெளிவாக தெரிந்தது..!!

“பர்சனலா..?? ஏன்யா.. பர்சனல் விஷயம் பேசுற எடமா இது..?? க்ரைம் ஸ்பாட்டுயா.. உள்ள விசாரணை நடந்துட்டு இருக்குது.. இங்க ஆளாளுக்கு டென்ஷன்ல இருக்குறோம்.. நீ என்னடான்னா..?? போ போ.. போயிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்டேஷன்ல வந்து பாரு..!!”

“இ..இல்ல ஸார்.. அவருக்கு என்னை நல்லா தெரியும்.. நான் வந்திருக்கேன்னு அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல.. இங்கல்லாம் இப்படி வந்து பாக்க கூடாதுயா.. நீ மத்தியானத்துக்கு மேல..”

“ஹையோ.. என்னை இங்க வர சொன்னதே அவர்தான் ஸார்..!!” அசோக் சற்றே சலிப்பாக சொல்ல, தனசேகரனின் முகத்தில் இப்போது ஒரு வியப்பு.

“என்னது.. அவர்தான் வர சொன்னாரா..??”

“ஆமாம்..!! நீங்க உள்ள போய்.. அவர்ட்ட கொஞ்சம் சொல்றீங்களா.. ப்ளீஸ்..!!”

அசோக் பொறுமையற்ற குரலில் சொன்னான். தனசேகரன் இப்போது ஒருமாதிரி அவஸ்தையாக நெளிந்தார். அவருடைய குரலிலும் ஒருவித தடுமாற்றம்.

“எ..எங்களை வெளில நிக்க சொல்லிருக்காருயா.. உ..உள்ள போனா திட்டுவாரு..!!” தனசேகரன் அவ்வாறு தயக்கமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,

“தனசேகர்..!!!!” என்று வீட்டுக்குள் இருந்து ஒரு தடித்த குரல் ஒலித்தது.