இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

கலை: இல்ல.. லவ் பண்ணுனேன்.. ஆனா இப்போ இல்ல.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப் ஆகிட்டோம்..

கிஷோர்: ஹப்பாடா!! இப்ப தான் ங்க எனக்கு நிம்மதியா இருக்கு.. நேத்து முழுக்க உங்க நினைப்பு தாங்க.. மனசெல்லாம் ஒரே கவலை நீங்க எனக்கு கிடைக்கல ன்னு.. (ஹம்ம் என ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு) கலை இனிமேல் எந்த பிரச்சனையும் இல்ல..

கலை: புரியல! எதுக்கு பிரச்சினை? என்ன பிரச்சனை?

கிஷோர்: அட!! என்னங்க நீங்க!! நம்ம லவ் க்கு எந்த பிரச்சனையும் இல்ல ன்னு சொன்னேன்..

இவன் சொல்லி விட்டு மொபைலை நோண்டி கொண்டிருக்க அவளிடம் எந்த பதிலும் இல்லை.. ஒரே நிசப்தம்.. “என்ன கலை அமைதியா இருக்க” ன்னு நிமிர்ந்து அவளை பார்க்க..

அவள் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, நாற்காலியில் பின்னால் நன்கு சாய்ந்தவாறே இரு புருவங்களையும் சுருக்கி அவனை முறைத்து கொண்டிருந்தாள்..

முறைக்கும் அவள் கண்களை அவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.. ஒரு குருவின் கோபத்துக்கு சீடன் எப்படி அடங்கி போவானோ அது போல அவன் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மரியாதை கலந்த பயத்துடன் அடங்கி ஒடுங்கி போக நாற்காலியில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்க அவன் வாய் மட்டும் சின்னதாக அசைந்து மெலிதான குரலில் “ஏன் முறைக்குறீங்க கலை”

கலை: நான் எப்போ உன்னை லவ் பன்றேண் ன்னு சொன்னேன்.. ரொம்ப கற்பனை பண்ணாத.. (கிஷோரின் பாவமான முகத்தை பார்த்து அவளுக்கு அதற்கு மேலும் திட்ட மனமில்லை.. மாறாக அவனை முன் போல் மாற்ற நினைத்தால்)

“மன்னிச்சுருங்க கலை” என்ற சொற்களை மட்டும் கிஷோரின் வாய் உதிர்த்தது..

சில நொடிகள் அமைதிக்கு பின்னர்

கலை: சரி நான் லவ் பண்ணிருக்கேன். அது நான் தான் ஆல்ரெடி லவ் பண்ணிருக்கேன் ல.. என்னை ஏன் லவ் பண்ணனும்னு உனக்கு தோணுது..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.