இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

அந்த மத்திய நேர பொழுதில் வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. வெயிலுக்கு பயந்து கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் வெகு குறைவாக இருந்ததால் ராமுடன் பேசி கொண்டிருந்த அந்த பெண்மணிக்கு ஓய்வு நேரமும் அதிமாகவே இருந்தது. அதில் சில நிமிடங்களை இவனுடன் செலவழிக்க முடிவு செய்து “சரி தம்பி என்ன சொல்லணும் சொல்லுங்க” என்றாள்..

ஒரு சின்ன நட்பு புன்னகையை உதிர்த்து விட்டு ராம் தொடர்ந்தான்.. “ஆண்ட்டி, எனக்கும் ராகுல் க்கும் எந்த சம்பந்தமும் இல்ல, சொல்லப்போனா நான் அவரை பாத்தது கூட இல்ல.. நான் ஏன் அவரை பத்தி தெரிஞ்சுக்கணும் ன்னு நினைக்குறேன்னா அதுக்கு எங்க தான் காரணம் என்னோட அண்ணன் தான்”

ஏன் உங்க அண்ணனுக்கும் ராகுலுக்கு ஏதாச்சும் பிரச்சனை யா?

இல்ல ஆண்ட்டி.. அவங்க ரெண்டு பெரும் பிரண்ட்ஸ் தான்..

அப்புறம் ஏன் பா, நீ??

சொல்றேன் ஆண்ட்டி.. எங்க அண்ணனுக்கு எப்போவும் பிரச்சனை னா அது அவனோட பிரண்ட்ஸ் மூலமா தான் வரும்.. அவன் சூது வாது தெரியாம, ரொம்ப வெகுளி தனமா வளர்ந்தவன் ஆண்ட்டி, இன்னும் அப்புடியே தான் இருக்கான்.. என்னோட பிரண்ட் கூட பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன் ன்னு முத தடவ போனான்.. ஒன்றரை லட்சம் நஷ்டத்தோட திரும்ப வந்தான்..

அந்த பெண்மணியின் முகத்தில் இருந்த கோவ ரேகை சிறிதாக மறைந்து கருணை ரேகை குடி புக தொடங்க, அவள் ஆர்வமாக ராம் சொல்வதை கவனித்தாள்.

ரெண்டாவது தடவையும் அவன் அதே மாதிரி போனப்போ அந்த நஷ்டம் ரெண்டு லட்சமா மாறிச்சு.. மூணாவது தடவ போனவனை அவனோட இன்னொரு பிரண்ட் ஒரு மோசடி கேஸ் ல மாட்டி விட்டுட்டான்.. அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வக்கீல் ஆஃபீஸுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சு அந்த பிரச்சனை ல இருந்து என்னோட அண்ணனை வெளிய கொண்டு வர்றதுக்கு எங்க குடும்பம் ரொம்பவே கஷ்ட பட்டோம் மனசு அளவுலையும் பொருளாதார அளவுலையும்..

ராம் சொல்வதை ஆர்வமாக கவனித்து கொண்டிருந்த அவளின் முகத்தில் இருந்த கோவ ரேகை முற்றிலுமாக மறைந்து போயிருக்க, கருணை ரேகை முழுவதுமாக குடி புகுந்து அவளது வாயை அவளையறியாமல் உச் கொட்ட வைத்தது..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.