இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 68

ரொம்ப நல்லவனா இருந்தாலும் ஏமாளியா இருக்குற என்னோட அண்ணன் மேல நாங்க தனி கவனம் காட்ட வேண்டியது அவசியமா இருக்கு.. கடைசியா இப்போ நாலு நாளைக்கு முன்னாடி ஒருத்தர் அவர் வாட்ச் ஐ ரிப்பேர் பண்றதுக்கு அவர் போகாம எங்க அண்ணனை போக சொல்றாரு அதுவும் லீவுக்கு நாள்ல..

அவள்: அட யாருப்பா அது?

அவர் தான் ஆண்ட்டி ராகுல்..

இப்போது அவள் செல்லமாக ராமை கடுகளவு முறைக்க, ராம் அப்டியே தொடர்ந்தான்..

எங்க!!! என்னோட அண்ணன் மறுபடியும் ஏதாச்சும் ஏழரை கொண்டு வந்து விட்டுருவானோ ன்னு ஒரு சந்தேகத்துல தான் ஆண்ட்டி விசாரிக்க வந்தேன்.. நான் இப்போ ராகுல் தப்பானவர் ன்னு சொல்ல வரல, அவர் நல்லவரா கூட இருக்கலாம், அதை உறுதி செய்யலாம் ன்னு இங்க வந்தேன் அன்னைக்கு.. அதான் இங்க வேலை பாக்குற உங்க கிட்ட கேட்டேன் அவர் பத்தி.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் தான் வாங்க வந்து இருக்கேன்.. வேற எதுவும் இல்ல ஆண்ட்டி.. இப்போ சொல்லுங்க, இன்னமும் என்மேல கோவமா தான் இருக்கீங்களா?

நான் சொல்ல என்னப்பா இருக்கு.. நான் முன்னாடி பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காத.. ஏதாச்சும் வாங்கணும்னா நம்ம கடைக்கு வா, ஆண்ட்டியே உனக்கு ஹெல்ப் பண்றேன்.. அப்புறம் உங்க அண்ணனை கொஞ்சம் கவனிச்சுக்கோ ப்பா..

ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி புரிஞ்சுக்கிட்டதுக்கு..

ஸ்னேஹமாக அவனை பார்த்து சிரித்து விட்டு “சரிப்பா ஆண்ட்டி பில் கவுன்ட்டர் பக்கத்துல தான் இருப்பேன், ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா கூப்பிடு சரியா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

சில நிமிடங்கள் கடந்தது ..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.