இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

ஹும்ம்ம், கிளம்புங்க டி, நீ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு கிளம்பு.

அப்போ நீங்க வரலையா க்கா?

நான் கொஞ்சம் கணக்கு பாத்துட்டு அரை மணி கழிச்சு போவேன் டி.

சரிக்கா நாங்க கிளம்புறோம்..

மற்ற மூணு பெண்களும் மின் விளக்குகளை அணைத்து விட்டு கிளம்ப, அழகிய கைக்கடிகாரத்திற்கு சொந்தக்காரி மீண்டும் கணினி திரையை ஒளிர செய்து, தான் முன்பு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்து செல்ல அந்த கடையின் வாசலில் ஒரு உருவம் நிழலாடிக் கொண்டிருந்தது..

அவள் அன்னநடை போட்டுக்கொண்டு கதவை திறக்க அந்த சூப்பர் மார்க்கெட் வாசலில் டி-ஷர்ட் யும், ட்ராக் பேண்ட் உம் மாக ராம் நின்றிருந்தான்.

ஹாய் ஆண்ட்டி!!

நீயா ப்பா.. கடை மூடிட்டோமே தம்பி.. நீ காலைல வந்து பொருள் வாங்கிக்கிரியா?

அது இல்ல ஆண்ட்டி. நீங்க ராகுல் பத்தி சொல்றேன் ன்னு வர சொன்னிங்களே.

சற்று யோசித்து விட்டு “ஆமா!! நான் தான் வர சொன்னேன் ல.. ஆனா நீ தான் வர மாட்டேன் ன்னு சொன்னியே தம்பி”

ஆமா ஆண்ட்டி சொன்னேன்.. பட் அப்புறம் யோசிச்சு பாத்தேன், அண்ணனை கைவிட கூடாது ல. அதான் தெரிஞ்சுப்போமே ன்னு வந்தேன்..

ஓ!!! சரிப்பா.. இப்போ ஆண்ட்டி க்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீ வேணா நாளைக்கு வாயேன்.. சொல்றேன்..

ராம் சற்று வாடிய முகத்துடன் “அப்படியா!! அப்போ நாளைக்கு பாக்கலாம் ஆண்ட்டி” என்று சொல்லி முடிக்க கடைக்குள் டமால் டமால் என்று பெரிய சத்தம் கேட்டது..

பதறிப்போன அவள் சுவிட்ச் ஐ அமுக்கி மின் விளக்குகளை எரிய விட்டு பார்க்க கடைக்கு உள்ளே ஒரு ரேக்கில் இருந்த அனைத்து பொருள்களும் கீழே விழுந்து கன்னாபின்னா வென சிதறி கிடந்தது..

உடனே கோவமாக “ச்சா இந்த கவிதா பொண்ணுணுணுணு” என்று பல்லை கடித்து விட்டு “நாளைக்கு வரட்டும், அவளுக்கு இருக்கு” என்று சத்தமாக சொல்லிவிட்டு

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.