இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 68

தம்பி!! நீங்க போன தடவ எங்க ராகுல் தம்பிய பத்தி விசாரிக்க வந்தப்போ நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்?

ஆண்ட்டி, நான் இப்போ அதுக்காக வரல

இந்த கதைலாம் வேணாம் பா.. அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.. அவங்க தொழில் நடத்துற இடத்துக்கே வந்து எதோ ராகுல் தம்பி பெரிய தப்பு பண்ண மாதிரி நீங்க விசாரிக்க வர்றது நல்லா இல்லப்பா.. இன்னொரு தடவ

அவள் பேசி முடிப்பதற்குள் தன் கையிலிருந்த ஒரு காகித துண்டை எடுத்து அவள் முகத்திற்கு நேராய் நீட்டினான். அதில் வீட்டிற்கு தேவையான Dove 70ml Hair Shampoo, Dove Bar Soap, Lyzol Lavendar Flavour All Cleaning Purpose & Harpic Bathroom Cleaner 1 Ltr – 2 Nos என ஒரு பெரிய லிஸ்ட் இருந்தது..

இதுக்கு தான் ஆண்ட்டி வந்துருக்கேன்.. யாரை பத்தியும் தெரிஞ்சுக்க வரல இப்போ..

ராமின் கையில் இருந்த லிஸ்ட் ஐ பார்த்து விட்டு எதுவும் பேசாமல் சற்று கோவ பார்வையை அவன் மேல் வீசி விட்டு அங்கிருந்து நகர, “ஆண்ட்டி ஒரு நிமிஷம்” என்ற குரல் அவளை தடுத்து திரும்ப வைத்தது..

திரும்பி ராமை பார்த்து, தன் பார்வையாலேயே “என்ன?” என்ற கேள்வியை கேட்க

நான் போன தடவ வந்து உங்க கிட்ட ராகுல் பத்தி கேட்டது அநாகரிகம் தான், அது எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது.. அதனால ராகுல் பத்தி தெரிஞ்சுக்கணும் ங்கிற நினைப்பையே விட்டுட்டேன்.. ஆனா நான் எதுக்காக அவர் பத்தி விசாரிக்க வந்தேன் ன்னு தெரிஞ்சுக்காம நீங்க என்னை பாக்குறப்போ லாம் எரிக்குற மாதிரி பாக்குறது, நான் எதோ பெரிய தப்பு பண்ண மாதிரி எனக்கே தோண வைக்குது.. அதனால என் பக்கத்துல இருந்து என்ன காரணம் ன்னு தெரிஞ்சுக்கோங்க.. அதுக்கப்புறமும் என்மேல வெறுப்போடு இருக்கணுமா ன்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க.. இது நான் ஏன் சொல்றேன் ன்னா நல்ல குவாலிட்டி ஆனா பொருட்கள் கிடைக்குற சூப்பர் மார்க்கெட் ல இதுவும் ஒன்னு.. அதனால நான் அடிக்கடி இங்க வர்ற மாதிரி இருக்கும்.. நீங்களும் என்னை முறைச்சிட்டே இருந்தா நல்லா இருக்காது ல அதுக்கு தான்..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.