இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 67

சரி ஆண்ட்டி.. பை!!!

கணினியின் திரை மின்னிக்கொண்டிருக்க அதற்கு கீழே இருந்த விசைப்பலகையில் உள்ள பொத்தான்களை பத்து அழகிய விரல்கள் மென்மையாக தட்டிக்கொண்டிருந்தது. இடது கையின் மணிக்கட்டில் இரண்டு தங்க வளையல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மெல்லிசை எழுப்ப, வலது கையின் மணிக்கட்டில் ரோஸ் நிறத்தில் ஒரு அழகிய Casio கைக்கடிகாரம் மாட்டியிருந்தது. இரு உள்ளங்கையும் பூமித்தாயை பார்த்து இருக்க வலது உள்ளங்கை மட்டும் வானத்தை பார்க்கும் படி திரும்ப கைக்கடிகாரத்தில் உள்ள சிறிய முள் எட்டிலும் பெரிய முள் ஆறிலும் இருந்ததை அழகிய இரு கண்கள் நோட்டமிட்டு அந்த தகவலை மூளைக்கு அனுப்ப, மூளை அந்த செய்தியை வாய்க்கு அனுப்பியது..

“ஹும்ம்ம்!!! மணி எட்டு முப்பது ஆகிருச்சு” என ஒரு பெண் குரல் அவளுக்கு மட்டுமே கேட்கும்படி ஒலித்தது..

கணினி திரை அணைக்கப்பட விசைப்பலகையை தட்டிக்கொண்டிருந்த பத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்றாக பின்னல் போட்டு சோம்பல் முறிக்க “டப் டப் டப் டப்” என சொடுக்கு சத்தம் ஒலிக்க..

அந்த பெண்மணி எழுந்து “ஹே கவிதா, எங்கடி இருக்க?” என்று கத்தினாள்.

ஒரு பெண் ஓடி வந்து “அக்கா சோப்பு லோடு வந்து இருந்திச்சில்ல, அதுதான் அடுக்கி வச்சுட்டு இருந்தேன் க்கா. என்னக்கா?”

மணி எட்டரை ஆகிருச்சு டி, இன்னைக்கு கடையை சீக்கிரம் மூடுறோம் ன்னு சொல்லிருந்தேன் ல. நீ அப்புறம் இன்னும் வேற யாரெல்லாம் இருக்கீங்க?

நான், முத்து லட்சுமி, பிரவீணா மூணு இருக்கோம் க்கா. அவங்க ரெண்டு பேரும் மேல இருக்காங்க. அப்போ நாங்க போலாமா க்கா?

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.