கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 12

“அவர் நல்லவராத்தான் இருக்கணும்ன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. ஏன்னா நீ ஒரு தரம் அவரை தொடப்பத்தால அடிச்சதும், மாமா அரிவாளை தூக்கினதுக்கு அப்புறம், ஒரு தரம் கூட நம்ம வீட்டுப்பக்கம், ஏன் நம்ம ஊர்லேயே அவரை நான் பாக்கல; குடிக்கறது அவருக்கு ஒரு வியாதின்னு நினைக்கிறேன்; குடிப்பழக்கத்துக்கு அடிக்ட் ஆன ஒரு மன நோயாளி அவர்; நான் என்ன சொல்றேன்னா, அப்பா இருக்கற இடம் உனக்கோ, மாமாவுக்கோ தெரிஞ்சிருந்தா, எங்கிட்ட சொல்லும்மா, எனக்கு அவரை ஒரு தரம் பாக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா; இத்தனை நாள்லே அவர் திருந்தியும் இருக்கலாமில்லயா?
“ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேம்மா, உனக்கு விருப்பம் இல்லன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன். எனக்கு உன் மன நிம்மதிதாம்மா முக்கியம். இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். உனக்குஅப்புறம்தான் எனக்கு எல்லாமே; என் அப்பா, என் வேலை; என் செல்வா, என் கல்யாணம் எல்லாமே உனக்கு அப்புறம்தாம்மா.” சுகன்யா தன் முகத்தை துடைத்துக்கொண்டு தெளிவாக பேசினாள்.
“நீ உன் அப்பாவை போய் பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல; அவன் எனக்கு புருஷன் மட்டுமில்லே; உன் அப்பாவும் கூடத்தான்; ஆனா என்னைக் கூப்பிடாதே; அவங்க அப்பா, அம்மாவுக்கு அவன் புள்ளை; எனக்காக அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு என் கூட வந்தான். இப்ப அவன் தன் பெத்தவங்களோடத்தான் இருக்கான்னு நெனைக்கிறேன்; அஞ்சாறு வருஷம் முன்னாடி என் மாமனாரையும், மாமியாரையும் தற்செயலா ஒரு முறை கல்கத்தாவுல உன் மாமா பாத்ததா சொன்னான்; அவனுக்குத்தான் ஊர் ஊரா அலையற வேலையாச்சே; அவங்க ரெண்டு பேரும், ரகு கிட்ட, தங்களோட பிள்ளை, எனக்கு பண்ண கொடுமைக்கு மன்னிப்பு கேட்டாங்களாம்.”
“என்னையும் உன்னையும் நேரா ஒரு தரம் பாக்கணுமின்னு சொன்னாங்களாம். என்னைப் பாத்து மன்னிப்பு கேக்கணும்ன்னு சொன்னாங்களாம். ஆரம்பத்துல எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்காத அவங்க, வயசானதால வேற வழியில்லாமா, ஆதரவில்லாமா, கல்கத்தாவுல ஏதோ வேலை செய்துகிட்டு இருந்த, உன் அப்பாவோட போய் சேர்ந்துகிட்டாங்களாம். உன் மாமனும் ஒரு தரம் வயசானவங்க சொன்னாங்களே, அட்ரஸ் எல்லாம் குடுத்தாங்க; அவங்களை மட்டுமாவது போய் பாத்துட்டு வரலாமான்னு என்னைக் கேட்டான். நான் வேணாம்ன்னு தீத்து சொல்லிட்டேன்.”
“அவங்கக்கூட எனக்கு எப்பவும் எந்த பழக்கமோ, உறவோ இருந்ததே இல்லைம்மா. பார்க்காத, பழகாத ஒருத்தர் கிட்ட எப்படி பாசம் வரும்; எனக்கு எந்த பாசமும் அப்ப அவங்க மேல வரலை. புதுசா எதுக்கு இந்த வயசுல சிக்கல்களை வளர்த்துக்கிட்டு, அதன் மூலமா நீ பாதிக்கப்படக்கூடாதுன்னு நான் நெனைச்சேன். அப்பதான் நீ காலேஜ்ல சேர்ந்தே… ஹாஸ்டல்ல தனியா இருந்தே; யார் தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி, நேரத்துக்கு எழுந்து, மனசு ஒன்றி நல்லாப் படிச்சு, ஒரு சாதாரண வாழ்க்கைக்கு நீ மாறிகிட்டு இருந்த நேரம்; எந்த காரணத்தாலும் உன் மனசுல எந்த குழப்பமும், அந்த கொடுமைக்காரன் நினைவும் வந்து உன் படிப்பு கெட்டுப் போகறதை நான்விரும்பலை.”

“அம்மா … நீ எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கேம்மா … எப்படிம்மா இதுக்கு நான் நன்றி சொல்லப்போறேன்” சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். நிமிர்ந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
“கண்ணு … பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே … பெத்துக்கிட்ட நான் … என் கடமையைச் செய்யறேண்டி … உங்கிட்ட நான் எதையும் எதிர்ப்பாத்து இதையெல்லாம் செய்யலை; இப்ப நீ நிம்மதியா தூங்கு … நாளைக்கு நீ ஆபீசுக்கு போகணும் …”
“அம்மா … அப்ப நான் என் கடமையை செய்ய வேண்டாமா உனக்கு?”
“நீ எனக்குத்தான் திருப்பி செய்யணும்ன்னு அவசியம் இல்லை”
“அப்புறம் வேற யாருக்கு செய்ய?”
“நான் உனக்கு செய்யறேன்; நீ உன் புள்ளைங்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லாமால் செய் …
“ சுந்தரி மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டு சுவரைப் பார்த்தாள். அதுவரை தன் மன உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் பெண் தான் அழுவதை உணர்ந்துகொள்ளாத படி, தன் கண்களில் வழியும் கண்ணீரை அவள் சத்தமில்லாமல் துடைத்துக் கொண்டாள். சுகன்யா வழக்கம் போல் தன் கையைத் தன் தாயின் இடுப்பில் போட்டு அவளை வளைத்துக்கொண்டாள் … சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் மனம் தளர தூக்கத்திலாழ்ந்தாள்.

டைனிங் டேபிளில், கணவனுக்கும், மகனுக்கும் இரவு உணவை பரிமாறிக் கொண்டிருந்தாள் வசந்தி. அத்தை நீங்க உக்காருங்க, நான் எடுத்துப் போடறேன், தன் மாமியாரின் கையிலிருந்த சாதம் நிறைந்த கிண்ணத்தையும், கரண்டியையும் வாங்கிக் கொண்டாள் வேணி.
“எப்படிம்மா இருக்கார் உங்கப்பா?”
“பரவாயில்லே மாமா … உங்களை மாதிரி ரெகுலரா வாக்கிங் போக மூக்கால அழறார். தெனமும் இதுக்கு ஒரு சண்டை காலையில அம்மாவுக்கும் அவருக்கும் நடுவில …”

Updated: March 26, 2021 — 9:17 am