கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 9 11

ன் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல், மீண்டும் விம்ம ஆரம்பித்தாள். சுந்தரி தன் மகள் பேசியதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் மனசு மகிழ்ச்சியில் முழுமையாக பூரித்துப் போனது. சுகன்யா பேசி முடித்து விம்மத் தொடங்கியதும், அவளை மீண்டும் தன் புறம் இழுத்து மார்புடன் தழுவிக்கொண்டு சுகன்யாவின் கன்னத்தில் ஒழுகும் கண்ணீருடன் சேர்த்து, தன் தாய்மை உணர்ச்சி பொங்க முத்தமிட்டவள், அவள் முதுகை வருடிக்கொடுத்தாள்.
“சுகன்யா! கண்ணு, உன்னை நெனச்சு நான் ரொம்ப பெருமைப்படறேண்டா செல்லம். என் பொண்ணுக்கு, இன்னொரு பொம்பளையோட மன உணர்ச்சிகளையும், உடல் உணர்ச்சிகளையும் மதிக்கற பெரிய மனசு இருக்கு; நான் உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்கிறேண்டி. உன்னை ஒரு சுயநலவாதியா நான் வளர்க்கலை. உன் சுகத்துக்காக அடுத்தவங்க வாழ்க்கையை நீ கெடுக்கமாட்டே; இன்னைக்கு இது தெரியறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு.
“நீ சொன்ன மாதிரி நாலைஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் கூட என் உடம்பு என்னை பாடாப் படுத்தியிருக்கு; உடம்பு சுகம் என்னான்னு நல்லா தெரிஞ்சவதானே நான்? நானும் கல்யாணமாகி, நாலு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லாமா, அவன் கூட சந்தோஷமா இருந்து, உன்னை பெத்துகிட்டவ தானேடி; அதுக்கு அப்புறம் தானே எங்க வாழ்க்கையில பிரச்சனை தொடங்குச்சு; ஆனா எப்படியோ இது வரைக்கும், என் மனசை கட்டுப்படுத்திகிட்டு, சோத்துல கொஞ்சம் உப்பை கம்மியா போட்டு திண்ணுகிட்டு, ரோட்டுல போகும் போது தலையை குனிஞ்சி நடந்து, ஆம்பிளைங்களை திரும்பி பாக்காமே என் வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்”.
“எவன் கண்ணும் என் உடம்புல பட்டது இல்லேன்னு என்னால சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தரம், கொஞ்சம் அழகான, ஆம்பளைங்க என்னை, கடைத்தெருல, கோவில் குளத்துல, உத்து பாத்திருக்காங்க; அப்ப என் உடம்பும் சித்த நேரம் சிலுத்து போனதை என்னால மறுக்க முடியாது. எத்தனையோ நாய் என் பின்னால முரட்டுத்தனமா கொலைச்சுப் பாத்துச்சுங்க; ஆனா அந்த நாய்ங்க எவனையும் மனசுல நான் நினைக்காமா, எவன் கையும் என் உடம்புல படாமா இருந்தேட்டேன்னு உறுதியா உன் கிட்ட என்னால சொல்லமுடியும். இப்பல்லாம் என் மனசும் சரி, உடம்பும் சரி அந்த அளவுக்கு என்னைத் தொந்தரவு பண்ணல. மனசு மரத்துப் போச்சுன்னு வெச்சிக்கோயேன்” சுந்தரி பேசுவதை நிறுத்தினாள்.
“அம்மா, மாமா சொன்னாருல்ல; தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு; இங்க சென்னைக்கு வந்து, நான் தனியா இருக்க ஆரம்பிச்சதுலேருந்து, நாலு பேரை பாக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம், முகம் தெரியாத ஜனங்களோட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், மத்தவங்க வாழ்க்கையில அவங்க அனுபவிக்கற சுக துக்கங்களையும், துயரங்களையும், நல்லது கெட்டதுகளையும் பத்தி கேள்வி பட்டதுக்கு அப்புறம், என் கண்ணால பாக்கறதுக்கு பின்னாடி, என் அப்பா மேல இருந்த கோபம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிடுச்சி.

Updated: March 26, 2021 — 9:17 am