எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 53

அதைப் பார்த்த சங்கீதா ஒருகணம் குழம்பிப் போனாள்.. குனிந்து கையில் எடுத்தாள்..!! அது பாட்டியின் பரம்பரை மோதிரம், விலைமதிப்பில்லாதது என்று அவளுக்கு தெரியும்..!! ஆனால்.. அது எப்படி இங்கே.. அண்ணனின் அறையில்..??

“பாட்டிஈஈ..!!”

என்று கத்தியவாறே படிக்கட்டு இறங்க ஆரம்பித்தாள் சங்கீதா..!! பாட்டியிடம் சென்று அந்த மோதிரத்தை அவள் நீட்ட.. அவளுக்கும் அந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி..!!

“நான் இதை.. நம்ம மீரா பொண்ணுட்ட குடுத்தேனே.. இது எப்படி உன்கிட்ட..??”

“அ..அங்க அண்ணன் ரூம்ல கெடந்துச்சு பாட்டி..!!”

பாரதியும் அவர்கள் இருவருடனும் வந்து சேர்ந்துகொண்டாள்.. விஷயம் தெரிந்ததும் அவளுக்கும் குழப்பம்..!! ‘இது எப்படி இங்கே வந்திருக்கும்’ என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள.. அந்த குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது.. இரண்டு வாரங்களாக அசோக்கின் நடவடிக்கைகள் வேறு அவர்களுடைய சந்தேகத்தை கிளப்பியது..!!

“கொஞ்சநாளாவே அவன் ஒன்னும் சரியில்ல மம்மி..!! முன்னாடிலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் மூஞ்சி அப்படியே ப்ரைட் ஆயிடும்.. இப்போலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் அவாய்ட் பண்ணிடுறான்.. அவன் மட்டும் இல்ல.. இந்த கிஷோரும்..!!” சங்கீதா சொல்ல, இப்போது மற்ற இருவரையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது.

“அவனுக்கு ஃபோனை போடுடி..!!” என்றாள் பாரதி, மூளையில் பலப்பல எண்ண ஓட்டத்துடன்.

“ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான் மம்மி..!!” முயன்று பார்த்து சொன்னாள் சங்கீதா.

“ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கானா..??”

பாரதியின் பதற்றம் இப்போது மேலும் அதிகரித்தது..!! நெஞ்சில் ஒருவித கிலியுணர்வு கிளம்ப.. நெற்றியை பற்றி பிசைந்துகொண்டவள்.. சற்றே தடுமாற்றமான குரலில் மகளிடம் சொன்னாள்..!!

“ச..சரி.. கி..கிஷோருக்கு ஃபோனை போடு..!!”

அதே நேரத்தில்.. அசோக்கின் அலுவலகத்தில்.. வீடியோ எடிட்டிங் அறையில்..

“விடு மச்சி.. ஃபோன் பண்றது வேஸ்ட்..!! அவன் ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிருக்கான்.. ஸ்விட்ச் ஆஃப் ஆகி வேற இருக்கு..!!” சாலமன் சொல்லிக்கொண்டே மேஜையில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்தான்.

“இப்போ என்னடா பண்றது..?? திடீர்னு எங்க போய் தொலைஞ்சான்..??” வேணு கையை பிசைந்தான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனுடைய செல்ஃபோன் அலறியது..!! எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன், நெற்றியை பிசைந்தான்..!!

“யார்டா..??”

“சங்கி..!!”

அடுத்த அரைமணிநேரத்தில் அசோக்கின் நண்பர்கள் அவனுடைய வீட்டில் இருந்தார்கள்..!! அசோக்குடைய குடும்பத்தினர் அவர்களை சூழ்ந்துகொள்ள.. கடந்த இரண்டு வாரங்களாக அசோக்கிற்கு நேர்ந்ததை எல்லாம்.. ஒவ்வொன்றாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்..!! மீரா அசோக்கை விட்டு பிரிந்து சென்றது.. அவர்களுக்கு தெரியாமல் இவர்கள் அவளை தேடிப்பிடிக்க முயன்றது.. இப்போது அவளை கண்டுபிடிக்கிற வழியெல்லாம் அடைபட்டுப்போனது.. அவளை அடையமுடியாத ஏக்கத்தில் அசோக்கின் மனநிலை மிக மோசமாகிப்போனது.. சற்றுமுன் கிஷோருடன் ஏற்பட்ட சண்டை.. அதைத்தொடர்ந்து அவன் காணாமல் போனது.. எல்லாவற்றையும் வேறுவழியில்லாமல் சொல்லிமுடித்தார்கள்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please 🙏

Comments are closed.