நீண்ட நாட்களுக்குப் பின் அந்த அதிகாலை நேரத்து ஆவேச கலவிக்கு பின் மனமும் உடலும் அபரிதமான திருப்தியில் திளைக்க, அன்றைய காலை எங்கள் இருவருக்குமே ரம்மியமானதாக புலர, நான் மன்நிறைவோடு எழுந்து, மகிழ்ச்சியுடன் குளித்து உடலை குளிர வைத்து பின் காலை உணவை தயாரிக்க, நானும் கணவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே காலை உணவை முடித்தோம்.
காலை உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் என்னை கொஞ்சிக் கொண்டிருந்த என் கணவர் பயணக் களைப்பில் கண்கள் அசருவதாக சொல்லி உறங்க வேண்டும் என்று படுக்கைக்கு செல்ல, நான் 11 மணிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, அது வரை தூங்குங்க, நான் 10.30-க்கு எழுப்புறேன் என்றேன். சரி என்று சொல்லி விட்டு படுத்தவர் நான் சொன்ன நேரத்தில் எழுப்பிய போது எந்த அசைவும் காட்டாமல் கிடந்தார். தோள்களை பிடித்து உலுக்கியும், கன்னத்தில் தட்டியும் எழுந்திரிக்காமல் அடம் பிடிக்க நான் மெல்ல மெல்ல கோபத்தில் விழுந்து கத்த துவங்கினேன். அதற்கும் மசியாமல், கண்களை லேசாக திறந்து பார்த்து விட்டு, ரொம்ப டயர்டா இருக்குடி, இப்ப போனாலும் என்னாலே அவங்க சொல்ற வேலையெல்லாம் செய்ய முடியாது என்றார்.
வேணும்ன்னே பண்றீங்களா? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க. நான் ஹெல்ப் பண்றேன். எல்லாம் முடியும் வாங்க.
நீ ஹெல்ப் பண்ணாலும் இப்போ முடியாது. காலைலேயே எல்லாம் முடிஞ்சு போச்சு…
என்ன முடிஞ்சு போச்சு?
அதான் வந்தவுடனே ஒரு ஷாட் போட்டேனே. அதிலே ஸ்டாக் காலியாகிருக்கும்…
கணவரின் பதில் எரிச்சலை கிளப்ப…
லாவண்யான்னா மூணு டைம் செய்ற வரைக்கும் ஸ்டாக் இருக்குமா?
ஐயோ… அதை ஏண்டி சொல்லிக் காட்டுறே. உன் கிட்டே சொன்னது தப்பா போச்சு…
ஆமா எல்லாமே தப்பா தான் போகுது.
ப்ளீஸ்… இன்னைக்கு விட்டுடும்மா. ட்ராவல் பண்ணி வந்திருக்கேன். அப்புறம் உன்னை… தூக்கமா வருதுடி…
இப்படி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் தொடவே விட்டிருக்க மாட்டேன்.
….
எந்திரிக்க முடியுமா? முடியாதா?
….
கொஞ்ச நேரம் கோபத்தில் கத்திக் கொண்டிருந்து விட்டு சலித்துப் போய் ஹாலுக்கு வந்து கோபத்தோடு அமர்ந்துக் கொண்டேன்.
மதியம் ஒரு மணியை நெருங்கிய போது என் கணவர் எழுந்து ஹாலுக்கு வந்தார். என்னிடம் வந்து அமர, நான் எந்த அசைவும் இல்லாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.
கோபமா அம்மு…?
…
ஸாரி…
….
பசிக்குதுடி…
திரும்பி கோபமாக முறைத்து விட்டு மீண்டும் டிவி பார்க்க துவங்கினேன்.
என்ன சமைச்சிருக்கே?
