அதற்கு பின் மனம் எதிலுமே ஒட்டவில்லை. மாலை லாவண்யாவை நேரில் சென்று பார்க்கலாமா என்று உதித்த யோசனையும், அது எதாவது புது பிரசனைக்கு அடி போட்டு விடக் கூடாதே என்ற அச்சத்தில் உடனே மறைந்து விட்டது. இருந்தாலும் மனம் கேட்காமல் ஸ்கூல் வாசலுக்கு வந்து திரும்பவும் லாவண்யாவுக்கு அழைக்க, இந்த முறை போனை எடுத்தாள் லாவண்யா.
என்னடி திடீர்ன்னு லீவ் போட்டுட்டே.
தலைவலிடி…
தலைவலியா வேற எதாவது ப்ரசனையா?
வேற என்ன பிரசனை? ஒண்ணுமில்லை. தலைவலிதான்.
ம்… லாவ்… உன்னை பார்க்கனுமேடி.
வீட்டுக்கு வா…
வீட்டுக்கா? ம்…
சும்மா வாடி. அவனும் இல்லை. ஒரு ப்ரண்ட்டை பார்க்க சேலம் போயிருக்கான். நாளைக்கு தான் வருவான்.
ஓ… சரி வரேன். ஆனா…
என்ன ஆனா?
நீ என்னை தொட கூடாது. சரியா?
அப்படியே எதாவது குளத்திலே கிணத்திலே போய் விழுந்து சாவு. இங்கே வராதே.
என்னடி இப்படி திட்டுறே.
சும்மா நிலைமை புரியாம பேசாதே. நீ வரவே வேண்டாம். கிளம்பு.
என்னன்னு சொன்னாதானே செல்லம் தெரியும். எதையோ மறைக்கிறே நீ…
ஒண்ணும் இல்லை. சரி வா…
என்னமோ நிலைமை புரியாமன்னு சொன்னே. என்ன நிலைமை?
ஐயோ… ஒண்ணுமில்லைங்க மேடம். தலைவலிதான் ஓவரா இருக்கு. நீ வந்தா எதாவது பேசிட்டிருந்தாலாவது மனசு ரிலாக்ஸ் ஆகும்ன்னு தோணுச்சு. அதை தான் அப்படி சொன்னேன். சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்டிட்டிருக்காம வாடி…
இனி நடக்கப் போகும் விபரீதங்களின் விளைவு தெரியாமல், லாவண்யாவின் மீதிருந்த ஈர்ப்பினால் நான் ஆட்டோ பிடித்து லாவண்யாவின் வீட்டிற்கு முகவரியை சொல்லி போக சொன்னேன்.
வீட்டிற்குள் நுழைந்து ஹால் ஷோபாவில் உட்கார்ந்திருந்த லாவண்யாவை கண்டதுமே மனம் பதறி விட்டது. என்னை நிமிர்ந்து பார்த்த லாவண்யா புன்னகைத்தாலும் அது இயல்பாய் இல்லை. முகம் கழுவி மெலிதாக பவுடர் போட்டு இருந்தாலும் அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவள் வீங்கிய கண்ணிமைகள் இரண்டும் காட்டிக் கொடுத்து விட்டன.
என்னால் முற்றிலுமாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் ஓடி சென்று அவளருகே அமர்ந்து அவளை இழுத்து தழுவிக் கொண்டு, என்ன ப்ரசனை லாவண்யா என்று பதட்டமாக கேட்க…
அவளோ துளியும் அலட்டிக் கொள்ளாமல் என்ன என்ன பிரசனை? என்று வியப்பவள் போல திருப்பி கேட்டாள்.
அழுதியா?
அழறதா? எதுக்கு? என்னடி உளர்றே?
மறைக்காதடி. உன் கண் ரெண்டும் வீங்கிருக்கு. அந்த கண்ணை எனக்கு தெரியாதா?
அடச்சீ… லூசே… நைட் சரியா தூக்கமில்லைடி. அதான்…
ஏன் தூக்கமில்லை…?
ச்சீ.. அதெல்லாம் கேட்டுட்டு…? என்ன ஆச்சு உனக்கு? என்னென்னமோ கேட்கிறே?
