டீச்சரின் அந்தரங்கம் Part 32 14

அப்புறம் ஏன் அவன் பின் சீட்டிலே ஒளிஞ்சிட்டு வந்தான்?

ஒளிஞ்சுட்டு வந்தானா? என்னடி சொல்றே?

நான் பார்த்தேன். அவன் தலையை பிடிச்சு அழுத்தினே நீ…

அடியே லூசுக் கழுதை. அன்னைக்கு தாண்டி வந்தான். வரும் போதே ரொம்ப காஜிலே வந்தான். என்னை லீவ் போட சொல்லிருந்தான். நான் தான் நீ வரது ஈவனிங் தானே. டே ஃபுல்லா சும்மா வீட்டிலே உட்கார்ந்திட்டிருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அந்த நாய் பொறுமையில்லாம ஆட்டோ பிடிச்சு ஸ்கூலுக்கே வந்துட்டான். கார்லே ஏறினதும்…

…

அங்கேயே கொஞ்சம் விவஸ்தை கெட்டத் தனமா நடந்துக்க ட்ரை பண்ணினான். நான் மிரட்டி பின் சீட்டுக்கு போக சொன்னேன். போனவன் அங்கே உட்கார்ந்துட்டு முன்னாடி கை விட்டு என் கிட்டே சில்மிஷம் பண்ணினான். தலைலே தட்டி பேசாம வர சொன்னேன். கோச்சுக்கிட்டு கம்முன்னு பின் சீட்டிலே படுத்துக்கிட்டான். அதை பார்த்து நீ உன் கற்பனையை கண்டபடி அலைய விட்டிருக்கே.

அவன்… ஸாரி… அவர் வரது உனக்கு முன்னாடியே தெரியாதா?

இல்லைடி… அப்ராட் வேலை பத்தி உனக்கு தெரியுமான்னு தெரியலை. அதுவும் கல்ஃப் கண்ட்ரீஸ்லே லீவ் கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம். கேட்டிருக்கேன்னு சொல்வான். நிறைய டைம் லீவ் கிடைக்காது. இந்த டைமும் லீவ் கேட்டிருக்கேன்னு ஒன் வீக் முன்னாடி சொல்லிருந்தான். ஆனா கன்ஃபர்மா சொல்ல முடியாதுன்னு சொல்லிருந்தான். திடீர்ன்னு தான் நைட் போன் பண்ணி நெக்ஸ்ட் டே வரேன்னு சொன்னான்.

நான் கொஞ்சம் யோசித்து, சரி அவன்… ஸாரி… ஸாரி… அவர் வந்து டூ டேஸ் ஆகுதுல்லே… ஏன் என் கிட்டே சொல்லலை நீ?

நீ எப்பவும் எதாவது யோசனைலே இருக்க மாதிரி தெரிஞ்சது. டல்லாவும் இருந்தே… அதோட…

அதோட????

என்னை கொஞ்சம் அவாய்ட் பண்ண நினைக்கிற மாதிரி தோணுச்சு. என்னை கண்டா விலகி போனே… சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு சொல்லலை.

அவாய்ட் பண்ணலாம்ன்னு தாண்டி நினைக்கிறேன். ஆனா முடிய மாட்டேங்குதே, எதுக்காக உன்னை இப்படி லவ் பண்றேன்னு எனக்கே புரியலையே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

யோசிக்க யோசிக்க, லாவண்யா சொல்வது உண்மை தான் என்பது புரிய துவங்க, கட்டின கணவனை கள்ளக் காதலனாக நினைத்து விட்ட என் கற்பனைகளை நினைத்து எனக்கே கொஞ்சம் சங்கடமாக போய் விட்டது. கூச்சத்தோடு லாவண்யாவை பார்த்து ஸாரிடி என்றேன்.

இட்ஸ் ஓகே…. லீவ் இட்… அவ்ளோதான் மேடத்தோட சந்தேகங்களா? இல்லை இன்னும் இருக்கா? எதுவாயிருந்தாலும் கேட்டுடுங்க மேம்…

லாவண்யாவை கணவனுடன் சென்றதை தவறாக கணித்து அதை அவளிடமே கேட்டு அவள் சொன்ன பதிலில் உள்ள உண்மையால் சங்கடப்பட்டு உட்கார்ந்திருந்த நிலையில் மேற்கொண்டு பேச வார்த்தைகள் வராமல் நான் அமைதியாக இருக்க, லாவண்யா, மேடம், அதை விடுங்க… பேசுங்க… என்று என் கன்னத்தை தொட வந்தாள்.
நான் கூசி விலகி, பேசாம இருடி என்றேன்.

லாவண்யா சிரித்து, மேடம் திடீர்ன்னு கற்புகரசியா மாறிட்டீங்க மேடம். நான் கூட தொட கூடாதா? சரி விடுங்க… நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா மேடம்.

ம்ம்ம்… கேளு….

என் வீட்டுக்கு வந்தியா?

ஏன்னை போல தயங்கிக் கொண்டிருக்காமல் லாவண்யா பளிச் என்று கேட்க…

ஒரு நொடி அப்படியே உறைந்து போய் விட்டேன். அந்த அதிர்ச்சியில் யோசிக்காமல், எப்படி தெரியும்? என்று கேட்டு விட…

லாவண்யா சிரித்தாள்.

என்னடி பழக்கம் இது?

ஸாரி… இதுக்கு… இதுக்கு… என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை லாவ்… ஸாரி…

சொல்ல சொல்ல என் திருட்டுத் தனத்தை கண்டு பிடித்து விட்டாளே என்ற அவமானத்தில் மனம் உடைந்து கண்களில் நீர் கோர்க்க, இன்னொரு புறம் நான் அவளை என் காதலியை போல நேசிப்பதையும், அவள் தன்னிடம் எதையும் மறைப்பதை நான் விரும்பவில்லை என்பதையும் அந்த அன்பும், பாசமும், காதலும் தான் நான் அன்று அவள் என்ன திருட்டுத் தனம் செய்கிறாள் என்று ரகசியமாக அவள் வீட்டுக்குள் ஒரு திருடியை போல நுழைந்து வேவு பார்க்க காரணம் என்பதையும் அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல், கேவலமான செயலை செய்து விட்டு மாட்டிக் கொண்டு அவமானத்தில் கூனி குறுகி நிற்கும் பெண்ணை போல தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.

என் விழியோரங்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்ப்பதை கண்ட லாவண்யா, பதறியவளாக பாய்ந்து என்னை தழுவிக் கொண்டு, என்னாச்சு அம்மு, ஏன் நீ இப்படி வீக்காயிட்டே. எவ்ளோ ஸ்டாராங்கான டீச்சர் நீ? இப்ப எதுக்கெடுத்தாலும் அழுறே, மூட் அவுட் ஆகுறே, என்ன தாண்டி நடக்குது உன் மனசுக்குள்ளே என்று என் தோள்களை தடவி கொடுத்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பின் அவளுடைய உடலின் உரசலும் தழுவலும் எனக்கு இதமாய் இருக்க நான் மெல்ல நிதானித்துக் கொண்டு அவளிடமிருந்து விலகி இல்லைடி… எனக்கென்னவோ அன்னைக்கு நீ யார் கூடவோ… ஸாரி…. அதை நான் உன் புருசன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. என் கிட்டே எதையோ மறைக்கிறேன்னு தோணுச்சு. என்ன செய்றோமேன்னு யோசிக்க விடாம நீ யார் கூட… ஸாரி… யார் கூட படுக்க போறேன்னு கண்டுபிடிச்சே ஆகனும்ன்னு ஒரு வெறி வந்திடுச்சு. கொஞ்சம் கூட யோசிக்காம என் கிட்டே இருந்த சாவியை வைச்சு உன் வீட்டுக் கதவை திறந்துட்டு உள்ளே நுழைஞ்சிட்டேன்… ஸாரி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *