நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

” உம்.. சம்பாரிச்சு..?”
”என்னென்ன வேனுமோ.. எல்லாம் வாங்குவேன்..! பெரிய டிவி.. பைக்… அப்றம் அம்மாக்கு மருந்து செலவு எல்லாம் பண்ணுவேன். .! ஆனா உனக்கு மட்டும் பத்து பைசா தரமாட்டேன். . நீ வேனா.. பாரு.” என்றான்.
”அடப் பரதேசி. . உனக்கு சோறுபோட்டு. . வளத்தி.. ஆளாக்கி விட்டது நானு..! ஆனா பெரியவனாகி.. சம்பாரிக்கற காலத்துல.. எனக்கு பத்தை பைசா தரமாட்டியா.. உன்ன…” என அவன் தலையில் அடித்தாள்.
”அப்பன்னா… எனக்கு இப்ப சோறு போட்டுத்தா..”

”என்ன சொன்னாலும். . உனக்கு இன்னிக்கு. . சோறு கெடையாது..”

சட்டென சட்டையைத் தூக்கிக்காட்டினான்.
”ப்ளீஸ்க்கா.. என் வயித்தப் பாரு..”
பார்த்தாள் ” தெரியல…”
” தொட்டுப் பாரு…! எத்தனை பசி தெரியுமா..?”
”ஓகோ. .. தொட்டுப்பாத்தா…பசி தெரிஞ்சிருமா..?”
”ம்..! பாரு…! வயிறு காலி…!!”
” தேவையாருந்தா…போய் போட்டுத் திண்ணு.. போடா..”
”என்னால.. எந்திரிக்க முடியலக்கா…”
”அப்படி போய்.. யாரு உன்னை வெளையாடச் சொன்னது…?”
”இனிமே போகமாட்டேன்…”
”போடா… எனக்கு வேலையிருக்கு…” என அவன் கன்னத்தில் தட்டிவிட்டு எழுந்தாள் உமா. ”போ.. போய் போட்டு.. சாப்பிடு..!!”

ஊறவைத்த..துணிகளை எல்லாம் துவைக்கத் தொடங்கினாள் உமா.

”அக்கா…” தாமோதரன் கத்தினான்.
”என்னடா..?”
” மருந்து இருக்கா..? ரத்தம் வருது..”

”ஜன்னலோரத்துல.. ஒரு டப்பா இருக்குபாரு..! கழுதை மாதிரி குதிச்சு.. கை..காலை ஒடச்சுட்டு வந்து… லொககா.. லொக்கானு… இங்க இருக்கறவ உயிரை எடு… பரதேசி. .” எனத் திட்டிக்கொண்டே… துணிகளைத் துவைத்தாள்.

துணிகளையெல்லாம் துவைத்து… அலசிப் பிழிந்து… கொடியில் காயப்போட்டு விட்டு. . வந்தபோது… தாமு கட்டிலில் படுத்திருந்தான்.

”சாப்பிட்டியாடா…?”
” உம்..” என்றான் ”இன்னும் அம்மா வல்ல..”
”மார்க்கெட் போய்ட்டு வரும்.” என அவனை ஒட்டி உட்கார்ந்தாள்.
” பணத்துக்கு என்ன பண்ண..?”
”கடன் வாங்கினேன். .”

உடம்பு அசதியாக இருந்தது. கட்டிலில் சாய்ந்து படுத்தாள்.
”மருந்து வெச்சியாடா..?”
”உம். . வெச்சிட்டேன்..”
”ஏன்டா.. லீவ் கெடைச்சா.. ஒரு நாள்கூட வீட்ல இருக்க மாட்டியா..? வெளையாடப் போறேன்… அங்க போறேன்.. இங்க போறேன்னுட்டு போய்.. ஏதாவது ஒரு வம்பு…சம்பாரிசசிட்டு வர்ரது..!”
”நல்ல அடி.. நடக்கவே முடியறதில்ல…!”
”நல்லா வேனும்…! ஆஸ்பத்ரி போகனுமா..?”
” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..”
”எனக்கென்ன… அனுபவி..!” எனக் கண்களை மூடினாள் ”டி வி சத்தத்த கம்மி பண்ணுடா..”

சத்தத்தைக் குறைத்தான் ”தூங்கறியா..?”
”உம். .”
சிறிது நேரம் கண்களை மூடினாள். கண்களுக்குள் கார்த்திக் தோண்றினான்.
மீசை முளைக்காத முகத்துடன் வந்து… அவளைக் கொஞ்சினான். முத்தங்கள் கொடுத்தான். கூடலுக்கு அழைத்த போது…
அவளது அம்மா வந்தாள். மூச்சு வாஙகிய படி… தளர்ந்து போய் வந்தாள்..!
”கட்டிட்டியா..?” உமா கேட்டாள்.
” உம்.. கட்டிட்டேன்.. உஸ்.. பயங்கர கூட்டம்..!”
” ம்..! இவனைப் பாரு. . முட்டியப் பேத்துட்டு வந்து படுத்துருக்கான்…”

காய்கறிகளைக் கீழே வைத்த.. அம்மா.. அவனிடம் வந்து கேட்டாள்.
”என்னடா தம்பு… பண்ணியிருக்க. .?”
”ஒன்னுல்லமா…” சிரித்தான்”சின்ன காயம்தான்..”
”ஆமாமா… ரொம்ப சின்ன காயம்தான்..!” எனக் கிண்டலாகச் சிரித்தாள் உமா ”உள்ளங்கை அளவுக்கு சின்ன காயம்.. இல்லடா..? உனக்கெல்லாம் முட்டிக்குக் கீழ காலே இருந்திருக்க கூடாது..”
”ராட்சசி…” என்றான் தாமு. அம்மா இருக்கும் தைரியத்தில்.. ”அம்மா இந்த அக்கா என்னென்ன சொல்லி திட்றா தெரியுமா..? உங்க ரெண்டு பேருக்கும் சோறும் கெடையாது.. ஒன்னும் கெடையாது… தெருவுல போய் பிச்சை எடுங்கன்னு.. சொல்றாம்மா..?”
” டேய். .. புளுகா..!” என்றாள் உமா ”பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணும்டா.. அப்ப சொல்லல.. இப்ப சொல்றேன். நீயும் .. உங்கம்மாளும் தெருவுல போய்..பிச்சை எடுங்க. . போங்க..!”

மாலை நேரம்..!!
வீட்டின் முன்பாக இருந்த. .. பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள் உமா.
அவள் பக்கத்து வீட்டு.. மஞ்சுளாவின் கணவன் குரு… அவளுடன் தண்ணீர் பிடிக்க வந்தான்.
”அந்தக்கா என்ன பண்ணுது..? நீங்க வரீங்க..?” உமா கேட்டாள்.
”வேலையா இருக்கா..” எனச் சலித்துக் கொண்டான். ”மனுஷன் சும்மாருந்தா மட்டும் புடிக்கவே.. புடிக்காது.. அந்த மகராசிக்கு..! ஏதாவது வேலை வாங்கிட்டே இருக்கனும். .!”
”ஏன். . நீங்க செஞ்சாத்தான் என்ன. .?”