நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 72

” போன் பண்றேன்…”
”ம்..!” என்று விட்டு… பைக்கைக்கிளப்பிப் போனான்.

கதவு தாளிடப்பட்டிருக்க..கதவைத் தட்டினாள். விட்டு. .. விட்டு நான்கைந்து முறை.. தட்டியபின்… அம்மா வந்து கதவைத் திறந்தாள்..!
மழை காரணமாக அம்மா. .அதிகமாக மூச்சு வாங்கினாள்.

” நீ போய் படுத்துக்க.. அதிகமா மழக்காத்துல நிக்காத..” என்றாள்.

அம்மா எதுவும் பேசாமல் போய் படுத்துக்கொண்டாள்.
களைப்புடன் இருந்த உமாவும் போய்… பாயை விரித்துப் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
உடனடியாக… தூக்கம் அவளை ஆட்கொண்டது…!!
☉ ☉ ☉

உலுக்கி எழுப்பப் பட்டாள் உமா. தாமுதான் அவளை எழுப்பினான்.

”என்னடா..?” தூக்கம் மழுவதும் கலையாமலே கேட்டாள்.
”உன்னப் பாக்க.. ஆள் வந்திருக்கு…” என்றான் தாமு.
” யாரு. .” என எழுந்து உட்கார்ந்தாள்.
சின்னப்பையன் ஒருவன் உக்காந்திருந்தான்.
”ஓ… நீயா.. வா..” என்றாள்.

பையன் சிரித்தான் ”ஒடம்பு செரியில்லையாக்கா..?”
”அதெல்லாம் இல்ல..” தோளிலிருந்து நழுவின.. புடவையை சரி செய்தாள்.
” அண்ணன்தான் பாத்துட்டு வரச்சொன்னாரு..” அண்ணன் என்பவன்.. சூபர்வைசர்..!
”ஏன்டா..?”
”போன் பண்ணா.. சுட்ச் ஆப்பா இருக்கு..”
” ஆமா. . சார்ஜ் போடல..”
”அதான்.. ஏன் வல்லேன்னு.. பாத்துட்டு வரச்சொன்னாரு..”
” இன்னிக்கு முடியாது. நாளைக்கு வர்றேனு சொல்லு.”
”சரிக்கா..” எழுந்தான்.
”காபி குடிக்கறியா..?”
” பரவால்லக்கா.. வேண்டாம்..!” என அந்தப் பையன் விடைபெற்றுப் போனதும் தாமு கேட்டான்.
”எப்ப வந்து படுத்த..?”
” காலைலதான்டா..” மணி பார்த்தாள்.
பத்தைக்கடந்திருந்தது.
”இந்தப்பையன் யாரு..?”
” மில்லுல வேலை செய்யறான்..”

”என்ன வயசு.. இவனுக்கு.?”
” பதினெட்டு..ஏன்டா..?”
”இல்லே..” எனச் சிரித்தான் ”நான் வந்தாலும் சேத்திக்குவாங்களா..?”
”உனக்கேன்டா.. அதெல்லாம். .?” என உமா சொல்ல…

”அப்படியே சாப்பிட்டு படுத்துக்க…” என உமாவைப் பார்த்துச் சொன்னாள்.. அவளது அம்மா. .!!

— நீளும். …!!!!